கல்லூரிக்கு கால தாமதமாக வந்த மாணவியை பெற்றோரை அழைத்து வரும்படி கல்லூரி நிர்வாகம் உத்தரவிட்டதால், வகுப்புகளை புறக்கணித்து திருச்சி உருமு தனலட்சுமி கல்லூரி மாணவ, மாணவிகள் போராட்டம்!

திருச்சி மாவட்டம், காட்டூர் பாப்பாக்குறிச்சி அருகே உள்ள உருமு தனலட்சுமி கல்லூரியில் பயிலும் ஒரு சில மாணவ, மாணவிகள் குறித்த நேரத்திற்கு கல்லூரிக்கு வராமல் தாமதமாக வருவதா லும், கல்லூரிக்கு வந்த பிறகு அடிக்கடி வகுப்புகளை புறக்கணித்துவிட்டு வெளியில் செல்வதாலும், விடுதியில் தங்கி படிக்கும் மாணவிகள் கல்லூரி நிர்வாகத்திடம் எந்த அனுமதியும் பெறாமல் அடிக்கடி வெளியில் சென்று வருவதாலும், ஒரு சில மாணவ, மாணவிகளுக்கு பல விரும்பத்தகாத சம்பவங்கள் கடந்த காலங்களில் நடைபெற்றுள்ளது.

இதனால் மாணவ, மாணவிகளின் எதிர்காலம் கேள்விக்குறியாவதோடு, கல்லூரிக்கும் அவப்பெயர் ஏற்படுகிறது. இதனை கருத்தில் கொண்ட உருமு தனலட்சுமி கல்லூரி நிர்வாகம், மொத்த மாணவ, மாணவிகளையும் உன்னிப்பாக கவனிக்கவும், உரிய நேரத்திற்கு வருகிறர்களா? என கண்காணிக்கவும் துவங்கியது.

இந்நிலையில், விடுதியில் தங்கி படிக்கும் மாணவி ஒருவர், பொங்கல் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு சென்றுவிட்டு, தாமதமாக கல்லூரிக்கு வந்ததால், அந்த மாணவியை வெளியில் நிற்க வைத்து, பெற்றோர்களை அழைத்து வருமாறு கல்லூரி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

இதனை பொறுத்துக்கொள்ள முடியாத அந்த மாணவி, சக மாணவ, மாணவிகளை திரட்டி கல்லூரி வகுப்பை புறக்கணித்து தன் தாயாரோடு இன்று போராட்டத்தில் ஈடுபட்டார்.

போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ, மாணவிகளிடம் கல்லூரி நிர்வாகம் பேச்சு வார்த்தை நடத்தியும், அதை ஏற்றுக்கொள்ளாமல், திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிப்பதாக கூறிவிட்டு மாணவ, மாணவிகள் சென்றுவிட்டனர்.

இதனால் கல்லூரி நிர்வாகத்திற்கும், ஒரு சில மாணவ, மாணவிகளுக்கும் முரண்பாடு ஏற்பட்டுள்ளது. இதை முளையிலேயே கிள்ளி எறியாவிட்டால், இது மோதலாக உருவெடுக்கும் அபாயம் உள்ளது.

-ஆர்.சிராசுதீன்.

Leave a Reply