ஆயிரக்கணக்கான மக்கள் வசித்து வரும் 15 வார்டுகளை உள்ளடக்கிய குடவாசல் பேரூராட்சி, சரி வர தூய்மை படுத்தப்படாததால் குப்பை மேடாக காட்சியளிக்கிறது. சேகரமாகும் குப்பைகள் மக்கும், குப்பை மற்றும் மக்காத குப்பையாக தரம் பிரிப்பதற்கு பிரத்தியேக இடம் இருந்தும், அதை சரிவர பயன்படுத்தாததால் குடவாசல் மயான கொட்டகையில் மலை போல் குப்பைகள் குவிந்து கிடக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
இங்கு மயானத்திற்கு வரும் சடலங்களை எரியூட்டுவதற்கும் மற்றும் அடக்கம் செய்வதற்கும் சரியான இடம் இல்லாமல் குப்பைகள் குவிந்துக்கிடக்கிறது.
இதனால் அருகில் இருக்கும் வீடுகளில் துர்நாற்றம் வீசுவதுடன், அங்கு தெருக்களில் சுற்றித்திரியும் நாய் மற்றும் பன்றிகள் குப்பைகளை கிளறுவதால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொள்வார்களா?
-க.மகேஸ்வரன்.