திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், தூசி ஊராட்சி எல்லைக்குட்பட்ட, வாகை கிராமத்தின் இடுகாட்டின் அருகே உள்ள வாகை ஏரியில், கால்வாய் வெட்டினோம், மரக்கன்றுகள் நட்டோம் என்று உள்ளாட்சி நிர்வாகம் கூறுகிறது. ஆனால், பணிகளோ இன்று வரை நடைபெறவில்லை, அதற்கு முன்னதாகவே பணிகள் நிறைவு என்று அறிவிப்பு பலகை தயார் செய்யப்பட்டுள்ளது.
தூசி ஏரி பகுதியானது தனியாருக்கு வீட்டு மனைகளாக விற்கப்பட்டு பெரியார் நகர் உருவானதால், மழைக் காலங்களில் மழை நீரானது இந்த ஏரி நிரம்பி வழிந்து கிராமத்தினுள் புகும் ஆபத்தான நிலை உருவாகியுள்ளது. அதே போல் இந்த வாகை ஏரியும் ஆகிவிடக் கூடாது என்பதுதான் அப்பகுதி மக்களின் ஆதங்கம்.
நான்கு முறைக்கு மேல் தமிழகத்தில் வெள்ளம் ஏற்பட்டும், தமிழக அரசின் நீரியல் மேலாண்மை இன்னும் கேள்விக்குறியாகவே உள்ளது.
நீர்நிலை ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றாதவரை மக்கள் நிம்மதியாக வாழமுடியாது.
-ச.ரஜினிகாந்த்.