தமிழக அரசு அமுல்படுத்தியுள்ள பேருந்து கட்டண உயர்வினை கண்டித்து ஏற்காடு ஒன்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர், ஏற்காடு பஸ் நிலையத்தில் கண்டன ஆர்பாட்டம் செய்தனர்.
ஒன்றிய செயலாளர் நேரு பேசியதாவது:
“தமிழக மக்கள் கட்டுப்பாடில்லா விலைவாசி மற்றும் ஜி.எஸ்.டி. வரி விதிப்பு போன்றவற்றால் அவதிப்பட்டு வரும் நிலையில், அரசு பேருந்து கட்டணம் திடீர் என அதிகளவில் உயர்த்தப்பட்டது மக்களை மேலும் துன்புறுத்துகிறது. எம்.எல்.ஏ.க்களின் சம்பளத்தை இருமடங்காக உயர்த்தி அந்த சுமையை மக்களின் மீது இறக்கியுள்ளது என்பதுதான் உண்மை. போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கள் கனத்த இதயத்துடன் கட்டனத்தை உயர்த்தியுள்ளோம் என்கிறார். அதே கனத்த இதயத்துடன் எம்.எல்.ஏ.க்களின் சம்பளத்தை குறைக்க வேண்டியதுதானே? எனவே, அரசு உடனடியாக இந்த கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும்.” –இவ்வாறு பேசினார்.
இந்த ஆர்பாட்டத்தில் மாவட்ட குழுவை சேர்ந்த சேதுமாதவன், பழனிசாமி, கிருஷ்ணமூர்த்தி, ஜோதி, குமார் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர்.
-நவீன் குமார்.