திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் தாலுக்காவில் உள்ள சுருட்டல் கிராமத்தில் மகாத்மா காந்தியின் தேசிய ஊரக வேலை உறுதித்திட்டதின் கீழ் பொய்யான விளம்பரபலகை வைக்கப்பட்டுள்ளது. ஆனால் உண்மையில் எந்த ஒரு பணிகளும் நடைபெறவில்லை. சுமார் ரூபாய். 25 லட்சம் செலவு செய்து சித்தேரிக்கு நீர் செல்லும் கால்வாய் வெட்டினோம் என்றும், நீர்வரத்துக்கான பாசன கால்வாய் மேம்பாடு செய்ய ரூபாய்.24 லட்சம் செலவிடபட்டுள்ளது என்றும், 479 எண்ணிக்கையிலான மரக்கன்றுகள் ரூபாய். 4,18,000.00 செலவில் நடப்பட்டுள்ளது என்றும் விளம்பரப்பலகை தயார் செய்துள்ளனர். ஆனால் அதற்காக தோண்டப்பட்ட குழிகள் அப்படியே உள்ளது, இந்த மேற்காணும் மோசடிக்கு அதிகாரிகளும் உடந்தையாக இருந்துள்ளனர். இது தொடர்பாக விரிவான விசாரணை செய்து முறைகேட்டில் ஈடுபட்ட நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பார்களா? இல்லை, இதை தோண்டிய குழியிலேயே போட்டு புதைப்பார்களா?
ச- ரஜினிகாந்த்.