பழுதடைந்த பாலம்!- பரிதவிக்கும் மக்கள்..! -வேடிக்கை பார்க்கும் அரசு அதிகாரிகள்..!

திருவாரூர் மாவட்டம், குடவாசல் ஒன்றியம், செருகளத்தூர் ஊராட்சியையும், தஞ்சை மாவட்டம், திருவிடைமருதூர் ஒன்றியம், பெரப்படி ஊராட்சியையும் இணைக்கும் முடிகொண்டான் ஆற்றின் குறுக்கே உள்ள பாலம், சுமார் நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்டது.

ஆனால், பல ஆண்டுகளாக பழுதடைந்த நிலையில் இன்று வரை சீர் செய்யப்படாமல் மூங்கில் இணைப்பு ஏற்படுத்தப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது.   பாலத்தின் தடுப்பு கம்பிகள் இல்லாததால், இரவு நேரங்களில் தடுமாறி ஆற்றுக்குள் விழும்  அபாயம் உள்ளது. 

குழந்தைகளை வைத்திருப்பவர்களும், குடிகாரர்களை வைத்திருப்பவர்களும் தினமும் உயிரை கையில் பிடித்துக்கொண்டுதான் இந்த பாலத்தின் வழியாகச் செல்ல வேண்டிருக்கிறது. இதனால் அப்பகுதி மக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி   வருகின்றனர்.

இதுக்குறித்து பொதுமக்களின் சார்பில் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் பலமுறை கோரிக்கை மனுக்கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

சம்மந்தப்பட்ட  அதிகாரிகள் சரிசெய்வார்களா? 

-க.மகேஸ்வரன்.

Leave a Reply