திருச்சி – தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் சர்வீஸ் சாலை அமைக்க வேண்டுமென பல்வேறு அரசியல் கட்சிகளும், தன்னார்வ அமைப்புகளும், பொதுமக்களும் கடந்த 9 ஆண்டுகளாக தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அதன் அடிப்படையில், சர்வீஸ் சாலை அமைப்பதற்காக கடந்த 2014 ஆண்டு தமிழக அரசு ரூ.84 கோடியே 50 லட்சம் நிதி ஒதுக்கியது. ஆனால், சர்வீஸ் சாலை அமைக்கும் பணிக்கு நிலம் கையகப்படுத்தும் பணி தொடங்கவில்லை.
இந்நிலையில், திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் ப.குமார், தேசிய நெடுஞ்சாலைத்துறை திட்ட இயக்குநர் சுதாகர்ரெட்டி, தேசிய நெடுஞ்சாலைகள் குழுதலைவர் ஹேமந்ராவ், பெல் துணைப்பொதுமேலளர் ஆதிமூலம், மற்றும் சர்வீஸ் ரோடு கூட்டமைப்பு தலைவர் சுப்பிரமணியன், செயலாளர் சக்திவேல் ஆகியோரை அழைத்து பெல் காவேரி பயணியர் விடுதியில் இன்று ஆலோசனை நடத்தினார்.
ஆலோசனைக்கு பிறகு திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் ப.குமார் கூறியதாவது:
திருச்சி – தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் சர்வீஸ் ரோடு இல்லாததால், சாலை விபத்துகள் அதிக அளவில் நடப்பது குறித்து தொடர்ந்து புகார்கள் வந்ததை தொடர்ந்து, கடந்த டிசம்பர் மாதம் 27-ம் தேதி தமிழக முதல்வர் மற்றும் மத்திய தேசிய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் மற்றும் தமிழக அரசு துறை அதிகாரிகள் தமிழகத்தின் பல்வேறு பிரச்சனைகள் குறித்து பேசியப்போது, அதில் திருச்சி – தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் பழைய பால்பண்ணை முதல் துவாக்குடி வரை உள்ள 18 கி.மீ தூரத்திற்கு சர்வீஸ் சாலை அமைப்பது குறித்து கலந்து ஆலோசிக்கப்பட்டதாகவும், அதன் அடிப்படையில் தற்போது ஆலோசனை கூட்டம் நடந்துள்ளதாகவும், திருச்சி – தஞ்சை தேசிய நெடுஞ்சாலையின் அகலம் 60 மீட்டருக்கு பதில் முதல் கட்டமாக 45 மீட்டர் அளவிற்கும் நிலம் கையகப்படுத்தி சர்வீஸ் சாலை அமைக்கப்படுமென்றும், தேவைப்பட்டால் இரண்டாவது கட்டமாக 60 மீட்டராக விரிவுப்படுத்தப்படும் என்றார்.
மேலும், தற்போது உள்ள சாலையின் அகலம் 20 மீட்டர் தான் என்றும், மேலும், 25 மீட்டர் அகலப்படத்தினால் வாகனப் போக்குவரத்திற்கு அது போதுமானதாக இருக்கும் என்றும், இதுக்குறித்து கலெக்டரிடம் கலந்து பேசி நிலம் கையகப்படுத்தும் பணி விரைவில் தொடங்கப்பட உள்ளதாகவும், தேவைப்பட்டால் மாநில நெடுஞ்சாலைத்துறை செயலாளரிடமும் கலந்து பேசப்படுமென்றும் கூறினார்.
மேலும், திருச்சி – தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் சாலை விபத்துக்களை தடுக்கும் விதத்தில் துவாக்குடி அண்ணாவளைவு, திருவெறும்பூர், மஞ்சத்திடல் பாலம், காட்டூர் ஆயில் மில் மற்றும் அரியமங்கலம் எஸ்.ஐ.டி ஆகிய 5 இடங்களில் சுரங்கபாதை அமைக்கப்பட உள்ளதாகவும், இதுக்குறித்து சில இடங்களை ஆய்வு செய்ய உள்ளதாகவும் கூறினார்.
கடந்த மாதம் 20-ம் தேதி திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினர் பொ.மகேஷ் சர்வீஸ் சாலை மற்றும் பெல் கணேசா ரவுண்டான அளவு குறைப்பது குறித்து, தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளை நேரில் அழைத்து வந்து ஆய்வு செய்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
-ஆர்.சிராசுதீன்.
Very poor Audio Recarding not able to hear. Trichy yenbadal 9varudam kakkavendiulladu. iday chennai, coimbatore yendral yeppavo mudindu irrukkum. karanam M.P, M.L.A Local official coordination illadadu than.