திருச்சிராப்பள்ளி, அண்ணா சிலை அருகில் உள்ள இ.ஆர்.மேல்நிலைப்பள்ளியில் படித்து வந்த திருச்சி மாவட்டம், லால்குடி வட்டம், மாந்துறை அருகில் உள்ள நகர் ரோட்டைச் சேர்ந்த ஆர்.ரஞ்சித் என்ற மாணவர், தன் பள்ளியில் படிக்கும் சக மாணவர்கள் தொடர்ந்து பல நாட்கள் கேலி கிண்டல்கள் செய்ததால், அதை சகித்துக்கொள்ள முடியாத ஆர்.ரஞ்சித் மனமுடைந்து தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலை செய்வதற்கு முன் தன் கைப்பட கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளார். அக்கடிதத்தில் தன் தற்கொலைக்கு காரணமான மாணவர்களின் பெயர்களையும் அதில் குறிப்பிட்டுள்ளார்.
அக்கடிதத்தின் உண்மை நகல் நமது வாசகர்களின் பார்வைக்காக இங்கு பதிவு செய்துள்ளோம்.
சக மாணவர்களின் இது மாதிரியான கேலி, கிண்டல்கள், ரஞ்சித் போன்ற மாணவர்களின் உயிருக்கு உலை வைத்து விடுகின்றது.
பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுப்பதற்கு, அரசாங்கம் எத்தனையோ சட்டங்கள் இயற்றினாலும், தனி மனித ஒழுக்கம் இல்லாத வரை, இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்துக் கொண்டேதான் இருக்கும்.
தன் பிள்ளைகள் முதல் மதிப்பெண்கள் பெறவேண்டும் என்பதில் தீவிரம் காட்டும் பெற்றோர்கள், அவர்கள் சமூகத்தில் மதிப்புமிக்கவர்களாகவும், மனிதாபிமானம் உள்ளவர்களாகவும் வாழ்கிறார்களா? என்பதை முதலில் உறுதிப்படுத்த வேண்டும்.
ஏனென்றால்,
ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப்படும்.
-ஆர்.மார்ஷல்.
Sir, Vanakkam News ok school photo podama irrunda nalla irrukum. Inda palliyil paditha nallavargal manam vadanaipadum.