அப்பாவி மக்களின் பெயர்களை பயன்படுத்தி விவசாயக் கடன் வழங்கியதாக மோசடி! – வங்கி மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் உடந்தை!

நாகை மாவட்டம், வேதாரண்யம் வட்டம், அகஸ்தியம் பள்ளி அஞ்சல், மட விளாகம் என்ற முகவரியில் வசிக்கும் கா.செல்வம் த/பெ கார்த்திகேயன் என்பவரின் பெயரில், வேதாரண்யம் கனரா வங்கி கிளையில் கிஷ்மித்ரா திட்டத்தின் கீழ் 2009-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 13-ம் தேதி ரூபாய் 50,000 /- கடன் வழங்கப்பட்டுள்ளதாக கணக்கு காட்டப்பட்டுள்ளது. கடன் எண் . 1273876015672.

Details of CANARA BANK, VEDARANYAM

Bank: CANARA BANK
Address: P B NO:10,, 51A,WEST MAIN STREET, VEDARANYAM 614810
State: TAMIL NADU
District: NAGAPATTINAM 
Branch: VEDARANYAM
Contact: 04369-250245
IFSC Code: CNRB0001273 
MICR Code: 611015010

மேற்காணும் கடன் தொகையை 8.5 சதவீதம் சேர்த்து 36 மாதாந்திர தவணையாக திருப்பி செலுத்த ஒப்புக்கொண்டதாகவும், அதன்படி கடன் தவணைகளை திருப்பி செலுத்தாத காரணத்தால் 30.06.2012 தேதிப்படி வட்டி சேர்த்து ரூ. 60,886/- ரூபாய் உள்ளதாகவும், இதை உடனே செலுத்த வேண்டும் என்றும், 19.07.2012 அன்று மேற்படி, கா.செல்வம் த/பெ கார்த்திகேயன் என்பவருக்கு கனரா வங்கித்தரப்பிலிருந்து வழக்கறிஞர் மூலம்  நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

வாங்காத கடனுக்கு வழங்கப்பட்ட வழக்கறிஞர் நோட்டீஸ்.

நோட்டிஸை பெற்றுக்கொண்ட  கா.செல்வம் எனக்கு வயலும் இல்லை, வங்கி கணக்கும் இல்லை, நான் விவசாயியும் இல்லை, நான் எந்த வங்கியிலும் கடனும் வாங்கவும் இல்லை, இப்படியிருக்கும் போது, எனக்கு எப்படி விவசாய கடன் வழங்கியிருக்க முடியும்? என்று கேள்வி எழுப்பியதின் விளைவாக, இப்பிரச்சனையை மேற்படி வேதாரண்யம் கனரா வங்கி கிளை நிர்வாகம் கிடப்பில் போட்டது. கிஷ்மித்ரா திட்டத்தின் கீழ் விவசாயக்கடன் வழங்கியதில் மிகப்பெரிய மோசடி நடைபெற்றிருப்பது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

நிலமில்லாத மற்றும் வங்கி கணக்கே இல்லாத கா.செல்வம் போன்ற அப்பாவி நபர்களின் பெயரை பயன்படுத்தி மிகப்பெரிய மோசடி செய்துள்ளனர். இந்த மோசடிக்கு வருவாய்த்துறை அதிகாரிகளும், வங்கி அதிகாரிகளும் மற்றும் இடைத்தரகர்களும் இதற்கு உடந்தையாக இருந்துள்ளனர்.

எனவே, நாடு முழுவதும் உள்ள அனைத்து வங்கிகளிலும் வழங்கப்பட்டுள்ள விவசாய கடன்கள் குறித்து சட்டப்படி உரிய விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவிட்டால் இதில் மிகப்பெரிய மோசடி நடந்திருப்பது வெளிச்சத்திற்கு வரும்.

-கே.பி.சுகுமார்.

One Response

  1. venkataraman February 11, 2018 7:47 pm

Leave a Reply