திருச்சி, திருவெறும்பூர் அருகே பட்டப்பகலில் பயங்கரம்! தனியாக இருந்த பெண்ணிடம் மின் வாரிய அதிகாரியை போல் நடித்து, 4 பவுன் தங்க சங்கிலி மற்றும் ரூ.16 ஆயிரம் பணம் பறிப்பு!


திருச்சி, திருவெறும்பூர் அருகே மின்வாரிய அதிகாரிபோல் நாடகமாடி நூதன முறையில் பெண்ணிடம் 4 பவுன் தங்க சங்கிலி மற்றும் ரூ.16 ஆயிரம் பணத்தை பறித்து கொண்டு தப்பி சென்ற மர்ம நபரை திருவெறும்பூர் போலீசார் தேடி வருகின்றனர்.

திருவெறும்பூர் அருகே உள்ள ஜெய்நகர் ஏ-செக்டரை சேர்ந்தவர் ராஜகோபாலன், இவர் பெல் ஊழியாராக இருந்து இறந்து விட்டார். இவரது மனைவி பிரேமா(64) இவர்களது மகன் முகுந்தன் இவர் சென்னையில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் பிரேமா மட்டும் தனியாக வசித்து வருகிறார்.

இந்நிலையில், இன்று காலை ஜெய்நகர் பிரேமா வீட்டின் அருகே பைக்கில் வந்த மர்ம நபர், தான் மின் வாரிய அலுவலத்தில் இன்ஸ்பெக்டராக வேலைப்பார்த்து வருவதாகவும், தனது பெயர் சந்திரசேகர் என்றும், தான் இந்த பகுதியில் ஏற்கனவே லைன்மேனாக வேலைப்பார்த்து தற்போது இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு பெற்றுள்ளதாகவும், தங்களை நன்கு தெரியும் என்றும் பிரேமாவிடம் அறிமுகமாகியுள்ளான்.

மேலும், பிரேமாவிடம் தாங்கள் மும்முனை மின்சாரம் கேட்டிருந்ததாகவும் தற்போது உள்ள மின்சாரத்தினால் கடந்த 2012 ஆண்டு முதல் தற்போது வரை சுமார் 2 லட்சத்துக்கு மேல் மின்சார வாரியத்தில் கூடுதலாக கட்டணம் கட்டி உள்ளீர்கள். அந்த பணம் உங்களுக்கு செக்காக அரசு திரும்ப அளிக்கும் என்று கூறியுள்ளான்.

மேலும், மின்சார மீட்டர் பொருத்தியுள்ள இடத்தில் மின்சாரம் வருகிறதா? என்று பாருங்கள் என்று பிரேமாவிடம் தண்ணீரை வாங்கி தெளித்துவிட்டு டெஸ்டரை வைத்து காண்பித்துள்ளான். மின்சாரம் வருவது பற்றி தெரிந்து கொள்ள  வைத்து பார்ப்பதற்காக உங்களது தங்க சங்கிலியை கொடுங்கள் என்று பிரேமாவிடம் இரண்டு முறை கேட்டுள்ளான். பிரேமா தனது தங்க சங்கிலியை தரமறுத்துள்ளார்.

அதனால் அந்த மர்ம நபர் ஒரு பேனாவை பிரேமாவிடம் கொடுத்து அவரிடம் நீங்கள் மின்சார வாரியத்திற்கு எந்த எந்த ஆண்டு எவ்வளவு பணம் கூடுதலாக செலுத்தியள்ளீர்கள் என்று கூறி பிரேமாவை ஒரு பேப்பரில் எழுத வைத்துள்ளதோடு, மும்முனை மின்சாரத்திற்கு டெப்பாசீட் இல்லாமல் 10 ஆயிரத்து 558 ஆகும் என்று பொருட்களின் விலையை கூறி அதனையும் பேப்பரில் எழுத வைத்துள்ளான். அந்த பொருட்களையும் வாங்கி வருவதாக கூறி பிரேமாவிடமிருந்து 16 ஆயிரம் பணத்தை வாங்கிச்சென்றுள்ளான்.

பின்னர் பிரேமா கழுத்தில் அணிந்திருந்த தங்க சங்கிலியை எப்படி கழட்டி கொடுத்தார் என்று பிரேமாவிற்கே தெரியாமல் கலட்டி வாங்கி ஒரு பேப்பரில் சுற்றி மீட்டர் மீது வைப்பதாக கூறி ஏமாற்றி எடுத்து சென்றுள்ளான்.

சிறிது நேரத்தில் சுய நினைவுக்கு வந்த பிரேமா, மீட்டர் பாக்ஸ்சை பக்கத்து வீட்டுகாரர் துணையுடன் திறந்து பார்த்தபோது, அந்த மீட்டர் பாக்சில் இருந்தது வெற்று பேப்பர் என்பது தெரியவந்ததோடு, தான் நூதனமுறையில் ஏமாற்றப்பட்டதும் தெரியவந்தது.

இருந்தும் அவர் பெல் கைலாஷ்நகர் மின்சார வாரிய அலுவலத்தில் சந்திரசேகர் என்ற பெயரில் யாராவது வேலை செய்கிறார்களா? என்று போன் செய்து விசாரணை செய்துள்ளனர். அப்படி யாரும் வேலை செய்யவில்லை என்று மின்சாரா வாரிய அலுவலத்தில் கூறியுள்ளனர்.

அதன் அடிப்படையில் பிரேமா மற்றும் நகர் நலச்சங்கத்தினர் திருவெறும்பூர் காவல்நிலையத்தில் புகார் செய்தனர். அதன் அடிப்படையில் திருவெறும்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டதோடு, இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

திருவெறும்பூர், நவல்பட்டு, துவாக்குடி ஆகிய காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் பட்டப்பகலிலேயே செயின் பறிப்பு மற்றும் கொள்ளை சம்பவங்கள் தொடர்ந்து நடைப்பெற்று வருகின்றது. எனவே, பொதுமக்கள் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.

திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தலைமையில் தனிப்படை அமைத்து இப்பகுதிகளை தீவிரமாக கண்காணித்தால் மட்டுதான் குற்றச் சம்பவங்களை தடுக்க முடியும்.

-ஆர்.சிராசுதீன்.

Leave a Reply