இலங்கையில் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட மூன்று நபர்கள் கைது!

இலங்கை கடற்படைக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், வன்கலை பகுதியில் இடம்பெற்ற தேடுதல் வேட்டையில், 13 கிலோ ஆமை இறைச்சி, 268 கிலோ எடை கொண்ட சுறா மீன்கள் ஆகியவற்றை, இலங்கை கடற்படை மற்றும் மீன்வளத் திணைக்களத்தின் அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். இதுதொடர்பாக மூன்று நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர்கள் நீர்கொழும்பு மீன்பிடி நடவடிக்கை மற்றும் நீரியல் வளத்துறை திணைக்களத்தில் சட்ட நடவடிக்கைகளுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

கடல் ஆமை மற்றும் சுறா மீன்கள் அரிய கடல்வாழ் உயிரினங்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதால், அதை பிடிப்பதோ, விற்பனைச் செய்வதோ, காட்சிப்படுத்துவதோ சட்டப்படி குற்றமாகும்.

-என்.வசந்த ராகவன்.

 

 

Leave a Reply