திருவாரூர் – தஞ்சை மார்க்கத்தின் நடுவே குடவாசல் பகுதி அமைந்துள்ளது. அரசியல் ரீதியாகவும், இனரீதியாகவும் அவ்வப்போது மோதல் ஏற்படும் பகுதி என்பதால், குடவாசலில் போலீஸ் ஸ்டேஷன் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு பாதுகாப்பு வழங்கி வருகின்றனர்.
குடவாசல் போலீஸ் ஸ்டேஷனுக்குட்பட்ட கிராமங்களான மஞ்சக்குடி, திருக்கண்ணமங்கை, சிமிழி, பெரும்பண்ணையூர், மேலப்பாழையூர், மணப்பறவை, ஆடிப்புலியூர், செருகளத்தூர், திருவிடச்சேரி, அத்திக்கடை விளங்குகிறது.
குடவாசல் போலீஸ் ஸ்டேஷனுக்குட்பட்ட பகுதி பெரிதாக விளங்குவதால் குற்றச்செயல்களைத் தடுக்க முடியாமல் போலீஸார் விழிபிதுங்கி நிற்கின்றனர்.
குடவாசல் போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டர் மணிமாறன், சப்-இன்ஸ்பெக்டர்கள், ஏட்டு, போலீஸார் என மொத்தம் 10 பேர் உள்ளனர்.
இவர்களுக்கு உதவியாக, போலீஸ் நண்பர்கள் குழுவைச் சேர்ந்த எட்டு பேர், திருவாரூர் மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் போலீஸாருக்கு உதவியாக அவர்கள் செல்லும் இடத்துக்கு சென்று வருகின்றனர். இவர்களுக்கு சம்பளம் கிடையாது. பகலில் நான்கு பேரும், இரவில் நான்கு பேரும் சுழற்சி முறையில் பணியாற்றுகின்றனர்.
இந்த போலீஸ் நண்பர்கள், காவல் துறையினரின் நெருக்கத்தை பயன்படுத்திக்கொண்டு, வாகனச் சோதனையில் ஈடுபடுவது, வாகன ஓட்டிகளை மிரட்டி பணம் பறிப்பது, கட்டப்பஞ்சாயத்தில் ஈடுப்படுவது, புரோக்கர் வேலை செய்வது… இப்படி சட்டத்திற்கு புறம்பான செயல்களில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
இவர்களின் இத்தகையச் செயல்பாடு ஒட்டுமொத்த காவல்துறையினருக்கும் களங்கத்தை ஏற்படுத்தி வருகின்றது.
எனவே, திருவாரூர் மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர் தலைமையில் தனிப்படை அமைத்து, இவர்களின் நடவடிக்கைகளை உன்னிப்பாக கண்காணித்தால் உண்மை வெளிச்சத்திற்கு வரும்.
-க.குமரன்.
The same problem in thiruvellore district pattari perumbdhur village central bank of India case not transfer the case to CBI and police also not taking action against the central bank of India and the accuset what to do DGP as to involve directly to the field
It’s true