இலங்கையின் கடல் சூழலை காப்பாற்றுவதற்கு கடந்த இரண்டு ஆண்டுகளில் இதுவரை 100,000 சதுப்பு நிலங்களை இலங்கை கடற்படை உருவாக்கியுள்ளது.
சதுப்புநிலப் பயிர்ச்செய்கைத் திட்டத்தின் கீழ், கரையோரப் பகுதிகள், மீன் மற்றும் அழிந்து வரும் இனங்கள் ஆகியவற்றின் பாதுகாப்பிற்காக விழிப்புணர்வு பணிகளையும் செய்து வருகிறது.
மேலும், மண்புழு பாதுகாப்பு, கடற்கரை சுத்தம், மறுசீரமைப்பு, பவளப்பாறை பாதுகாப்பு, ஆமைப் பாதுகாப்பு மற்றும் இன்னும் பல உயிரியல் திட்டங்களையும் செயல்படுத்தி வருகின்றது.
இதற்கென்றே கடல்சார் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு திட்டங்கள் மற்றும் கடல்சார் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு ஒன்றை, இலங்கை கடற்படை நிறுவியுள்ளது. அரசு மற்றும் அரசு சாரா அமைப்புக்களின் உதவியுடன் இதுபோன்ற திட்டங்களை வெற்றிக்கரமாக செயல்படுத்தி வருகின்றது.
-என்.வசந்த ராகவன்.