நடிகர் கமல் முன்கூட்டியே அரசியலுக்கு வந்ததால், நடிகர் ரஜினிக்கு பாதிப்பை ஏற்படுத்தாது: நடிகர் விவேக் பேட்டி!


திருச்சி துவாக்குடியில் உள்ள திருச்சி பப்ளிக் பள்ளியின் 3-வது அண்டு விழா நேற்று நடைப்பெற்றது. இவ்விழாவிற்கு பப்ளிக் பள்ளியின் நிர்வாகி பாஸ்கரன் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக திரைப்பட நடிகர் விவேக் கலந்து கொண்டார். பள்ளியில் மரகன்றுகளை நடவு செய்து மாணவ, மாணவிகள் மத்தியில் உரையாற்றினார்.

இன்று கட்டிய விமான நிலையம் 75 முறை விழுந்து விட்டதுஆனால், 2 ஆயிரம் ஆண்டுக்கு முன்பு கரிகாலன் கட்டிய கல்லணை இன்னும் கம்பீரமாக நிற்கிறது.

அப்போது காவிரி, கொள்ளிடத்தில் தண்ணீர் ஓடியது, தற்போது லாரிகள் ஓடுகிறது என்றார்.

செய்தியாளர்கள் சந்திப்பில் நடிகர் விவேக் கூறியதாவது:

அப்துல்கலாம் தமிழகத்தில் ஒரு கோடி மர கன்றுகளை நடவேண்டுமென கேட்டு கொண்டுள்ளார். நான் இதுவரை மொத்தம் 29 லட்சத்து 30 ஆயிரம் மர கன்றுகளை பள்ளி மற்றும் கல்லூரி என செல்லும் இடங்களில் நடவு செய்துள்ளேன்.

நிருபர்: எந்த வகையான மரகன்றுகளை நடவு செய்கீறீர்கள்?

தமிழகத்தில் வர்தா புயல் வருவதற்கு முன்பு அனைத்து வகை மரகன்றுகளையும் நடவு செய்தேன். ஆனால், நாட்டு மரங்கள் தான் புயலை தாங்ககூடியது என்பதை தெரிந்து கொண்டதால், தற்போது நாட்டு மரங்களை நடவு செய்து வருகின்றேன்.

நிருபர்: நடிகர் ரஜினிக்கு முன்பு, நடிகர் கமல் அரசியலுக்கு வந்ததால், நடிகர் ரஜினிக்கு பாதிப்பை ஏற்படுத்துமா?

பாதிப்பு ஏற்படுத்தாது, அவர்கள் இருவரும் இணைந்து நடித்துள்ளார்கள். ரஜினி ரசிகர் கமல் படத்தையும், கமல் ரசிகர்கள் ரஜினி படத்தையும் பார்பார்கள்எம்.ஜிஆர் அரசியலுக்கு வருவதற்கு முன்பு ஒரு அரசியல் கட்சியில் இருந்தவர். மேலும், பல உதவிகளை தன்னலம் பாராது செய்தவர். அதனால்தான் அவர் வெற்றி பெற்றார்.

நிருபர்: ஆர்.கே.நகர் இடைதேர்தலுக்கு பிறகு நடிகர் விஷாலை காணவில்லையே?

அவர் சினிமா துறையில் திரைப்பட நடிகர் சங்கத்தின் செயலாளராகவும்,  தயாரிப்பாளர் சங்க தலைவராகவும் இரண்டு பெரிய பொறுப்புகளை வகித்து வருகிறார். அவருக்கு இந்த துறையிலேயே வேலைகள் அதிகமாக உள்ளது.

எனது வேண்டுகோள், திருட்டு வி.சி.டி.யை ஒழிக்க வேண்டும். மேலும், திரைப்படம் திரைக்கு வந்த முதல் ஷோ முடிந்த உடனே அந்த திரைப்படத்தின் விமர்சனங்கள் இணையதளங்களில் வெளிவரமல் சிறிது காலம் கழித்து வருவதற்கு வழிசெய்யவேண்டும்.

நிருபர்: நீட் தேர்வினால் தமிழக மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படுவது குறித்து?

நீட் தேர்வில் சிலர் தேர்வு எழுதி வெற்றி பெற்றிருப்பதாகவும் சிலர் நீட் தேர்வு சிரமமாக உள்ளதாகவும் கூறுகின்றனர். என்னை பொறுத்தவரை மாணவர்கள் விரும்ப கூடிய படிப்பை அனைவரும் படிக்கவேண்டும்.

நிருபர்: காவிரி நதி நீர் பிரச்சனைக்கு கர்நாடகா நடிகர்கள் குரல் கொடுக்கும் அளவிற்கு, தமிழக நடிகர்கள் ஆர்வம் காட்டவில்லை என்று பொது மக்கள் மத்தியில் கருத்து நிழவுகிறதே?

கன்னட நடிகர்கள் காவிரி பிரச்சனைக்கு உணர்ச்சியோடு போராட்டத்தில் கலந்து கொள்கின்றனர். ஆனால், தமிழ் நடிகர்கள் சிந்திக்க வேண்டி உள்ளது. ஏராளமான தமிழர்கள் கர்நாடகாவில் வாழ்கின்றனர். நாம் போராட்டம் நடத்தினால் அவர்களுக்கு ஏதாவது பாதிப்பு ஏற்பட்டு விடுமோ என்று யோசிக்கிறோம்.

நிருபர்: கிராமபுற மாணவர்கள் தங்களை சந்திக்க ஆசைப்படுகிறார்கள். அவர்கள் எப்படி உங்களை சந்திக்க முடியும்?

கிராமபுறத்தில் உள்ள பள்ளிகளில் பெண் குழந்தைகளுக்கு தனி கழிவறைகள் இல்லாமல் கஷ்டப்படுகிறார்கள்.செல்வந்தர்கள், தன்னார்வாளர்கள் முன்வந்து அவர்களின் கஷ்டத்தை போக்கும் வகையில் கழிவறைகளை கட்டிதர முன்வரவேண்டும். கிராமபுற மாணவர்கள் என்னை தொடர்பு கொள்வதற்கு அதற்கான எண்ணை தருகிறேன்.

இவ்விழாவில் திருச்சி மாநகர காவல்துறை துணை ஆணையர் (குற்றம் மற்றும் போக்குவரத்து)  மயில்வாகணன், சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை, நடிகர் விவேக் மூலம் விழாவில் கலந்து கொண்ட பொது மக்களுக்கு வழங்க வைத்தார்.

திருச்சி கிழக்கு வட்டார போக்குவரத்து பிரிவு இன்ஸ்பெக்டர் நெடுஞ்செழியபாண்டியன் மற்றும் பெல் உதிரிபாகங்கள் தொழில் பிரிவு பொது மேலாளர் நாகமாணிக்கம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக  கலந்துக்கொண்டனர்.

 ஆர்.சிராசுதீன்.

 

Leave a Reply