மதுரை, அலங்காநல்லூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட சிக்கந்தர் சாவடிப் பகுதியில் குற்றச் சம்பவங்களில் ஈடுப்படுவதற்காக முகாமிட்டிருந்த ரவுடி கும்பலை, மதுரை மாநகர காவல்துறையினர் சுற்றி வலைத்தபோது, அங்கிருந்து சில ரவுடிகள் தப்பி ஓடி உள்ளனர். சில ரவுடிகள் காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால் ரவுடிகளுக்கும், காவல் துறையினருக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது.
அப்போது காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் முத்து (எ) இருளாண்டி, சகுனி கார்த்திக் என்கிற 2 ரவுடிகள் பலியாகி உள்ளனர். இதுக்குறித்து அலங்காநல்லூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தனிப்பட்ட ஆதாயத்திற்காக கொலை, கொள்ளை, கற்பழிப்பு, ஆள் கடத்தல், கட்டப்பஞ்சாயத்து, மிரட்டி பணம் பறித்தல், போதைப்பொருட்கள் விற்பனை… ஆகிய குற்றங்களை முழு நேர மற்றும் பகுதி நேர தொழிலாக செய்து வரும் முன்னாள் மற்றும் இந்நாள் குற்றவாளிகள் மீதும், அதற்கு உடந்தையாக இருக்கும் நபர்கள் மீதும் மற்றும் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் கூலி படையினர் மீதும், காவல்துறையினர் தயவு தாட்சணியமின்றி இரும்புகரம் கொண்டு ஒடுக்க வேண்டும்.
மேலும், சமூக விரோதிகளுடன் தொடர்பு வைத்துள்ள அரசியல்வாதிகள், அதிகாரிகள் மற்றும் தொழிலதிபர்கள்… ஆகியோரின் பெயர் பட்டியலை கணக்கெடுத்து, அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பதற்கு மத்திய, மாநில உள்துறை அமைச்சகத்தின் மூலம் அவசர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
அப்போதுதான் வெகுஜன மக்கள் நிம்மதியாக வாழ முடியும்.
–டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com