இலங்கையில் 404 கிலோ கஞ்சா மற்றும் வெடி மருந்துகள் பயன்படுத்தி பிடிக்கப்பட்ட 40 கிலோ மீன்கள் பறிமுதல்!

இலங்கை கடற்படைக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், நீர்கொழும்பு மற்றும் நவாச்சோலை பிரதேசங்களில்  மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளில், கேரளாவில் இருந்து கடல் மார்க்கமாக  கடத்தி வரப்பட்ட 404 கிலோ கஞ்சாவை, இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்துள்ளனர். இது சம்மந்தமாக  இருவர் கைது செய்யப்பட்டனர்.

மேலும், வெடி மருந்துகள் மற்றும் அங்கீகரிக்கப்படாத வலைகளை பயன்படுத்தி மீன்பிடித்தல் ஆகிய குற்றச் சம்பவங்களில் ஈடுப்பட்ட 06 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வெடிமருந்துகள் மூலம் பிடிக்கப்பட்ட 40 கிலோ மீனை இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

சட்ட விரோத நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்பட்ட படகு, இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனம், மீன்பிடி உபகரணங்கள் ஆகியவற்றையும் பறிமுதல் செய்துள்ளனர்.

-என்.வசந்த ராகவன்.

 

 

Leave a Reply