108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்குவதில் மோசடி!- ஊழியர்கள் கண்டண ஆர்பாட்டம்!

சிதம்பரம் காந்தி சிலை அருகில் 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் 50-க்கும் மேற்பட்டோர் தங்களுக்கு அரசாங்கம் அளித்த 15 சதவீத ஊதிய உயர்வை, 5 சதவீதத்தில் இருந்து 7 சதவீதம் வரை வழங்கிவிட்டு, 15 சதவீத ஊதிய உயர்வை வழங்கிவிட்டதாக GVK EMRI (Emergency Management and Research Institute) நிர்வாகம் பொய்யை பரப்பி வருகிறது என்றும், (PL LEAVE ) -ல் சம்பளம் வழங்குவதில் குளறுபடி என்றும், கண்டன கோஷங்களை எழுப்பி இன்று ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாட்டில் பணிபுரியும் 4,300 ஆண்,பெண் தொழிலாளர்களின் சலுகைகளை ஒப்பந்த நிறுவனமான GVK EMRI (Emergency Management and Research Institute) நிர்வாகம் தவறான வழி முறைகளை கையாள்கிறது என அரசாங்கத்திடம் வலியுறுத்தியும், தமிழக அரசு கண்டு கொள்ளவில்லை என ஊழியர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

-க.மகேஷ்வரன்.

 

 

Leave a Reply