குடி தண்ணீரை எடுத்து வாகனங்கள் கழுவுவதால், ஏற்காட்டில் தண்ணீர் பற்றாக்குறை தலைவிரித்து ஆடுகிறது!

சேலம் மாவட்டம், ஏற்காடு, ஒன்டிக்கடை பகுதியானது ஏற்காட்டின் பிரதான பகுதியாகும். இந்த பகுதியில் அண்ணா பூங்கா, ஏரி பூங்கா, கலையரங்கம் மற்றும் அதிகளவிலான உணவகங்கள் உள்ளன. மேலும், ஏற்காடு ஊராட்சி ஒன்றியத்திற்கு சொந்தமான வணிக வளாகத்தில் பல்வேறு கடைகள் உள்ளன. இவற்றிற்கு தேவையான குடி தண்ணீர் அருகில் உள்ள தண்ணீர் தொட்டியில் இருந்துதான் எடுத்து பயன்படுத்துகின்றனர்.

தற்போது கோடை காலம் துவங்கி உள்ளதால், குறைந்த அளவிலான தண்ணீரே இந்த தொட்டிக்கு வினியோகிக்கப்படுகிறது. இந்நிலையில் இந்த தண்ணீரை ஏற்காட்டை சேர்ந்த ஆட்டோ, கார் ஓட்டுனர்கள்… எடுத்து தங்கள் வாகனங்களை கழுவ பயன்படுத்தி தண்ணீரை தீர்த்து விடுகின்றனர். இதனால் அப்பகுதியை சேர்ந்த வியாபாரிகள் தண்ணீர் பற்றாக்குறையால் தவிக்கின்றனர்.

எனவே, தொட்டியில் இருந்து தண்ணீர் எடுத்து வாகனங்கள் கழுவுவதை உடனே தடுக்க வேண்டும். சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-நவீன் குமார்.

Leave a Reply