ஆன்மீக அரசியல் பயணம் ஆரம்பம்…! ஜம்மு மற்றும் காஷ்மீர் ஐ.பி.எஸ் அதிகாரி சந்தீப், நடிகர் ரஜினிகாந்தை சந்தித்தார்!

தமிழகத்தில் ஆன்மீக அரசியலை அறிமுகப்படுத்தப்போவதாக அறிவித்துள்ள நடிகர் ரஜினிகாந்த், தனது கட்சியின் பெயரை அறிவிப்பதற்கு முன்பாக முதலில் இமயமலையை நோக்கி தனது பயணத்தை தொடங்கியிருக்கிறார். இது வழக்கமாக செல்லும் பக்தி பயணம்தான் என்றாலும், இந்த காலக் கட்டத்தில்  இது முக்கியத்தத்துவம் வாய்ந்த நிகழ்வாக இது கருதப்படுகிறது.

இந்த பயணத்தின் போது நடிகர் ரஜினிகாந்தை ரகசியமாக சந்தித்து பேசுவதற்கு பல முக்கிய அரசியல் பிரமுகர்கள் முயற்சிகளை மேற்கொண்டபோதும், அதற்கெல்லாம் அவர் பிடி கொடுக்கவில்லை.

இந்நிலையில், ஜம்மு மற்றும் காஷ்மீர் ஐ.பி.எஸ். அதிகாரி சந்தீப்,(SANDEEP IPS-127967-SP CITY SOUTH JAMMU) நடிகர் ரஜினிகாந்தை மார்ச் 12 -ந்தேதி நேரில் சந்தித்து உரையாடினார்.

நடிகர் ரஜினிகாந்துடன் ஐ.பி.எஸ் அதிகாரி சந்தீப்.

பணிவு, கண்ணியம்  மற்றும்  ஆளுமைப்பண்பு மிக்க ஒரு மனிதரை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன் என்று, ஐ.பி.எஸ். அதிகாரி சந்தீப் பெருமிதத்தோடு குறிப்பிட்டுள்ளார்.

ஐ.பி.எஸ்அதிகாரி சந்தீப், கடந்த ஆண்டு (2017) சிறந்த காவல்துறை அதிகாரிக்கான விருதும், நற்சான்றும் பெற்றவர் (Order No:4710, Date:30.12.2017, Police Head Quarters, J&K- Jammu / Srinagar) என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

இமயமலையிலிருந்து நடிகர் ரஜினிகாந்த் சென்னை திரும்பியவுடன், அவரது அரசியல் நடவடிக்கை குறித்து பல அதிரடி அறிவிப்புகளை வெளியிடுவார்.

குறிப்பாக, காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்தும், அதில் தனது நிலைப்பாடு குறித்தும் வெளிப்படையான கருத்தை நிச்சயம் வெளியிடுவார். உச்ச நீதிமன்ற உத்தரவை உடனே நடைமுறைப்படுத்தும்படி, மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கவும் அவர் தயாராகவே இருக்கிறார்.

உச்ச நீதிமன்ற உத்தரவை மத்திய அரசே மதிக்கவில்லை என்றால், வேறு யார் மதிப்பார்கள்? என்ற கேள்வியையும் அவர் முன்வைப்பார் என்று தெரிகிறது.

–டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com

 

 

One Response

  1. welfareVenkataraman March 17, 2018 11:19 pm

Leave a Reply