சிதம்பரம் அருகே 100 நாள் வேலை செய்துக் கொண்டிருந்தவர்களை விஷவண்டுகள் கொட்டியதில் 50-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பாதிப்பு!

சிதம்பரத்தை அடுத்த காரப்பாடி கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் (100 நாள் வேலை) அப்பகுதி மக்கள் வேலை செய்துக் கொண்டிருந்தபோது வாய்க்கால் ஓரத்தில் இருந்த மரபுதரில் இருந்த  விஷவண்டுகள் (கதண்டு)  கொட்டியதில், 50-க்கும் மேற்பட்ட  பணியாளர்கள் பாதிக்கப்பட்டனர். இவர்கள் அனைவரும் சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதில் காரப்பாடியை சேர்ந்த வாலிபர் குமரவேல் (வயது 35) உயிருக்கு ஆபத்தான நிலையில் சிதம்பரம் இராஜா முத்தையா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.    

விஷவண்டு தாக்கி கவலைகிடமான குமரவேலை மேல் சிகிச்சைக்கு ஏற்றி செல்ல 108 ஆம்புலன்ஸ் வர தாமதம் ஆனதால், சிதம்பரம் வருவாய் கோட்டாட்சியர் ஆறுமுகம் தனது வாகனத்தில் அவரே ஏற்றி சென்றார். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

வயலில் உள்ள புதரில் விஷவண்டுகள் அதிக அளவில் கூடுகட்டியுள்ளதாகவும், அதனை அழிப்பதற்க்கு தீயணைப்பு துறையினர் நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

-க.மகேஷ்வரன்.

Leave a Reply