வீட்டில் உள்ளவர்கள் பெண்களை மதிப்பதோடு, தங்கள் குழந்தைகளுக்கும் சொல்லி கொடுக்க வேண்டும்: திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினரின் மனைவி ஜனனி மகேஷ் பேச்சு!

திருச்சி, திருவெறும்பூர் விடிவெள்ளி பெண்கள் அசம்ளி 10-ஆம் அண்டு நிறைவு விழா மற்றும் மகளிர் தின விழா திருவெறும்பூரில் இன்று நடைப்பெற்றது.

விடிவெள்ளி பெண்கள் அசம்பளி நிர்வாகி மருதம்பாள் தலைமை வகித்தார். தலைவர் ரமாதேவி முன்னிலை வகித்தார். ஆலோசகர் அன்பழகன் உரையாற்றினார்.

திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினர் பொ.மகேஷ் மற்றும் அவரது மனைவி ஜனனி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினர் பொ.மகேஷ் பேசியதாவது:

இன்றையாக காலகட்டத்தில் பெண்கள் பாதுகாப்பு கேள்வி குறியாகி உள்ளது. மார்ச் 8-ம் தேதி உலக மகளிர் தினவிழா கொண்டாடிவரும் வேலையில், மார்ச் 7-ம் தேதி இரவு திருவெறும்பூரில் உஷாவிற்கு நடந்த சம்பவம் வருத்தமளிக்கிறது.

பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும், நான் சார்ந்த இயக்கமும் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதோடு, பெண்களுக்கு சம உரிமை வழங்க வேண்டும் என்று குரல் கொடுத்துள்ளது என்றார்.

பின்னர் அவரது மனைவி ஜனனி பேசியதாவது:

பெண்கள் ஆண்களுக்கு நிகராக இருக்கவேண்டும், ஒரு பெண்ணின் உயர்வு அந்த சமூதாயத்தின் உயர்வு ஆகும். வீட்டில் உள்ளவர்கள் பெண்களை மதிப்பதோடு, தங்கள் குழந்தைகளுக்கும் சொல்லி கொடுக்க வேண்டும். அப்படி ஆண் குழந்தைகளுக்கு இன்று நாம் போதிக்கும் விதையானது, எதிர்காலத்தில் பெண்களின் உயர்வுக்கு வழிவகுக்கும் என்றார்.

இந்த விழாவில் பெல் அறிவாலயம் பள்ளி முதல்வர் சக்தி, பெல் மருத்துவமனை மருத்துவர் சசி, பெல் உளவு பிரிவு இணைபொதுமேலாளர் சாந்தி மற்றும் இலக்கியத்துறையை சேர்ந்த ஆண்டன்பெனி உட்பட ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.

முன்னதாக பதஞ்சலி நிருத்யாலயா நாட்டிய பள்ளி மாணவிகளின் வரவேற்பு நடனம் நடைப்பெற்றது.

முன்னதாக ஒருங்கிணைப்பாளர் கலாதேவி வரவேற்றார், மருதாம்பாள் நன்றி கூறினார்.

-ஆர்.சிராசுதீன்.

 

 

Leave a Reply