திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் டெல்டா இணையதள நண்பர்கள் சார்பில், லாரி உரிமையாளர்கள் சங்கம், வர்த்தக சங்கம் உள்பட பல்வேறு அமைப்பினர் இணைந்து, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து கண்டன பேரணி நடத்தினர்.
இந்த பேரணியானது மன்னார்குடி தேரடியிலிருந்து தொடங்கி, முக்கிய வீதிகளின் வழியாக கோட்டாட்சியர் அலுவலகம் வரை நடைபெற்றது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் 6 வாரகால அவகாசம் கொடுத்திருந்தது. ஆனால், அந்த அவகாசம் முடிந்தும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவில்லை. உடனடியாக மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை ஜல்லிக்கட்டுக்கு ஒன்றிணைந்து போராட்டம் நடத்தியது போல, கட்சி பாகுபாடுயில்லாமல் தொடர் போராட்டத்தை தொடருவோம் என பேரணியினர் தெரிவித்தனர்.
-ஜி.ரவிசந்திரன்.