காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து, பாரதமிகு மின் நிறுவன (BHEL) ஊழியர்கள் இன்று கண்டன பேரணியில் ஈடுப்பட்டனர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து, தமிழகம் முழுவதும் பல்வேறு அரசியல் கட்சிகளும், தன்னார்வ அமைப்புகளும், மாணவ, மாணவிகளும் கண்டனம் தெரிவித்து வருவதோடு பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக திருவெறும்பூர் அருகே உள்ள பெல் நிறுவன ஊழியர்கள் ஒருங்கிணைப்பாளர் தீபன் தலைமையில் பெல் நிறுவன வளாகத்திற்குள் இருந்து கணேசபுரம் வரை பெல் ஊழியர்கள் மாபெரும் பேரணியில் ஈடுப்பட்டனர். இந்த பேரணியில் பெல் ஊழியர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டதோடு மத்திய அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினார்கள்.
இன்று காலை முதல் பெல் ஊழியர்கள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்ற வாசகங்கள் அடங்கிய பேஜ் அணிந்து பணிக்கு சென்றனர்.
–ஆர்.சிராசுதீன்.