திருச்சி, திருவெறும்பூர் அருகே உள்ள தொடக்க வேளாணமை கூட்டுறவு சங்கத்தில், போட்ட பணம் மற்றும் அடகு வைத்த நகையை வழங்கி விட்டு, கூட்டுறவு சங்க தேர்தலை நடத்துங்கள்… என பெண் சலவை தொழிலாளி ஒருவர் மண்ணெண்ணை கேனுடன் வந்து தீக்குளிக்க போவதாக கூறியதால் பரப்பரப்பு ஏற்பட்டது.
தமிழகம் முழுவதும் கூட்டுறவு சங்க தேர்தல்கள் 4 கட்டமாக நடத்தப்படுமென்று தமிழக அரசு அறிவித்தது. அதன்படி திருவெறும்பூர் அருகே உள்ள அசூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில், இன்று வேட்பு மனு வாங்கப்படும். 16-ம் தேதி தேர்தல் நடைப்பெறும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், அசூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் முறைகேடு நடந்துள்ளதாக, கடந்த ஒரு ஆண்டுகளாக புகார் கூறிவந்த நிலையில், கூட்டுறவு சங்க தேர்தல் நடத்துவதற்கு முன்பு, ஏற்கனவே தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் முறைகேட்டினால் பாதிக்கப்பட்ட பொது மக்கள், தொடக்க வேளாண்மை கடன் சங்கத்தை இன்று முற்றுகையிட்டு, முதலில் தங்களது பிரச்சனைக்கு வழி செய்து விட்டு, தேர்தலை நடத்துங்கள் என்று போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
பாதிக்கப்பட்ட சலவை தொழிலாளியான சரோஜா என்பவர், இந்த தொடக்க வேளாண்மை கூட்டறவு வங்கியில் சிறு சேமிப்பாக ஒரு லட்சத்து 50 ஆயிரம் பணம் சேமித்து வைத்ததாகவும், அந்த பணத்தை தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி அதிகாரிகளிடம் ஒரு வருடமாக அலைந்து, ஒரு லட்சம் மட்டும்தான் வாங்கியுள்ளார். ஆனால், 50 ஆயிரம் இன்னும் கொடுக்கவில்லை. அதனால், அவர் மண்ணெண்ணை ஊற்றி தீக்குளிக்க போவதாக இன்று மண்ணெண்ணை கேனுடன் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திற்கு வந்துள்ளார். இதனால் இன்று அங்கு பரப்பரப்பு எற்பட்டது.
துவாக்குடி காவல் நிலைய பொறுப்பு ஆய்வாளர் சுப்பிரமணியன் அந்த பெண்ணிடம் இருந்த மண்ணெண்ணை கேனை பிடுங்கினார். இதுக்குறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.
அப்போது அதே ஊரை சேர்ந்த லூயிஸ், நான்கரை பவுன் நகையை 50 ஆயிரத்திற்கு அடகு வைத்ததாகவும், ஆனால், 59 ஆயிரம் என்று கணக்கு எழுதி வைத்துகொண்டு நகையை தரமறுப்பதாகவும், அதேப்போல் மரியதாஸ் 5 பவுன் நகையை 50 ஆயிரத்திற்கு அடகு வைத்ததாகவும், ஆனால், தற்போது 63 ஆயிரம் அடகு தொகை என்று பணம் கேட்பதாகவும், ரேவதி 36 ஆயிரத்திற்கு அடகு வைத்ததாகவும், அதில் 20 ஆயிரம் கட்டி விட்டதாகவும், ஆனால், அவர்கள் 16 ஆயிரத்திற்கு பதில் 36 ஆயிரம் கேட்பதாகவும் கூறினார்.
வனஜா என்பவர் 6 பவுன் நகையை 80 ஆயிரத்திற்கு அடகு வைத்ததாகவும், அதில் 70 ஆயிரம் திரும்ப வட்டியோடு சேர்த்து கட்டி விட்டதாகவும், ஆனால், மீண்டும் 80 ஆயிரம் கட்ட சொல்வதாகவும் கூறினார்.
வேல்முருகன் என்பவர் 3 பவுன் நகையை 39 ஆயிரத்து 900-க்கு கடந்த 2017 ஆண்டு அடகு வைத்ததாகவும், தற்போது திரும்ப போய் கேட்டால், உங்கள் பெயரில் அடகு வைக்கப்பட்டுள்ள நகை போலி நகையாக இருக்கிறது என்ற கூறுவதாகவும், ஊரத்துபட்டியை சேர்ந்த தங்கமணி என்பவர் நான்கரை பவுன் நகையை 30 ஆயிரத்துக்கு அடகு வைத்ததாகவும், ஆனால் இரண்டு மாதத்திலலேயே அந்த நகை திருப்பி 65 ஆயிரத்திற்கு அடகு வைக்கப்பட்டுள்ளது என்றும் புகார் கூறினார்.
அசூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் இப்படி பல முறைகேடு நடந்துள்ளன. முதலில் பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்சனையை தீர்த்து விட்டு கூட்டறவு சங்க தேர்தலை நடத்துங்கள் என்று அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
கூட்டுறவு சங்கம் என்றாலே குழப்பம்தான் என்பது இதன் மூலம் தெளிவாக தெரிகிறது.
-ஆர்.சிராசுதீன்.