திருவாரூர் மாவட்டம், குடவாசல் பேருந்து நிலையத்தில் “காவிரி மேலாண்மை வாரியம்” அமைக்க கோரி மத்திய மாநில அரசை கண்டித்து மக்கள் அதிகாரம் அமைப்பினர் கல்லணை முதல் பூம்புகார் வரை நடைபயணம் மேற்கொண்டனர். காவிரி உரிமை மற்றும் கார்ப்பரேட் கொள்ளைக்கு தமிழகம் பலியாவதை கண்டித்து குடவாசல் பேருந்து நிலையத்தில் பிரசார விளக்க கூட்டத்தில் கலந்து கொண்ட மக்களுக்கு விழிப்புண்ர்வு பிரசுரங்களை வழங்கி தமிழகத்தின் சீர்கேடுகளையும் மத்திய அரசை கண்டித்தும் மக்கள் அதிகார அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் ராஜி பொது மக்களுக்கு விளக்கி கூறினார்.
க.மகேஸ்வரன்