திருவாரூர் ஸ்ரீ ராஜதுர்க்கை அம்மன் ஆலய அஷ்ட பந்தன மகாகும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது.

திருவாரூர் திருமஞ்சனவீதி  தியாகராஜ சுவாமி ஆலயத்தின் தெற்கு கோபுரம் அருகில் அமைந்துள்ள ஸ்ரீ ராஜதுர்க்கை அம்மன் ஆலய அஷ்ட பந்தன மகாகும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது. 16.04.2018 திங்கள்கிழமை யாகசாலை அமைக்கப்பட்டு விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கி பத்து கால யாக சாலை பூஜை நடைபெற்றது  இன்று 27.04.2018  வெள்ளிக்கிழமையான  இன்று காலை பத்தாம் கால யாக பூஜையின் நிறைவு மகாபூர்ணஹுதி நடைபெற்று, மேளதாளங்கள் முழங்க கடங்கள் புறப்பட்டு, கோவிலை வலம் வந்து ராஜகோபுரம் உட்பட விமான கோபுரங்களுக்கு புனித நீர் ஊற்றி மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது, பின்பு மஹா தீபாராதனையுடன் பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டது.

-ரவிசந்திரன்.

Leave a Reply