சித்ரா பௌர்ணமியையொட்டி, காஞ்சிபுரம் அருள்மிகு ஸ்ரீ கர்ணகி அம்பாள் சமேத சித்ரகுப்த சுவாமி கோவிலில், இன்று அதிகாலை 5 மணி முதலே சிறப்பு தரிசனம் நடைபெற்றது. சித்ரகுப்த சுவாமிக்கு சிறப்பு அபிஷேகமும் மற்றும் ஆராதனைகளும் நடைபெற்றது. இதையொட்டி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஏழு கொள்ளு தீப விளக்கு ஏற்றி சித்ரகுப்தரை வழிபட்டனர். கோவில் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருக்கிறது.
-ம.சசி.