சேலம் மாவட்டம் ஏற்காடு தாலுக்காவிற்குட்பட்ட கீரைக்காடு கிராமத்தை சேர்ந்தவர் கும்பா கவுண்டர் மகன் குப்புசாமி, 46. இவரை கடந்த 23 ஆம் தேதி ஏற்காடு டவுன் பகுதியை சேர்ந்த செந்தில் என்பவர் அழைத்து சென்று மது அருந்தியுள்ளார். இதை குப்புசாமியின் சகோதரர்கள் லட்சுமணன் மற்றும் குப்பாகவுண்டர் ஆகியோர் பார்த்துள்ளனர்.
25 ஆம் தேதி வரை குப்புசாமி வராததால், அவரது உறவினர்கள் ஏற்காடு காவல் நிலையத்தில் குப்புசாமியை காணவில்லை எனவும், அவரை அழைத்து சென்ற செந்தில் மீது புகார் அளித்துள்ளனர். ஏற்காடு போலீசாரும் மேன் மிஸ்சிங் என சொல்லப்படும், காணவில்லை என வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த 25 ஆம் தேதி குப்புசாமி குடி போதையில் ஏற்காடு டவுன் பகுதியில் கிடந்ததாக கூறி, 108 ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு சிகிச்சையளிக்கப்பட்டு, நேற்றிரவு இறந்துள்ளார். இந்த விஷயம் குப்புசாமியின் உறவினர் எவருக்கும் தெரியாமல் இருந்தது.
இந்நிலையில் இன்று காலை ஏற்காடு காவல் நிலையத்திற்கு வந்த கிராம மக்கள், செந்திலை கைது செய்ய வேண்டும், வழக்கை மாற்றி பதிவு செய்ய வேண்டும் என காவல் நிலையத்தை முற்றுகையிட்டு, போலீசாரிடம் வாக்கவாதத்தில் ஈடுப்பட்டனர்.
அவர்களிடம் பேசிய ஏற்காடு காவல் ஆய்வாளர் ஆனந்தன், தற்போது இந்த வழக்கை சந்தேக மரணம் என மாற்றுவதாகவும், பிரேத பரிசோதனை அறிக்கைப்படி, வழக்கை பதிவு செய்வதாகவும் கூறினார். மேலும் ஏற்காடு எஸ்.ஐ. தலைமையில் தனிப்படை அமைத்து செந்திலை கைது செய்வதாகவும், கூறி கிராம மக்களை சமாதனம் செய்தார்.
– நவீன் குமார்.