40 ஆண்டுகளாக தனது தெருவை சுத்தம் செய்து வரும் வழக்கறிஞர்!

வழக்கறிஞர் ராஜேந்திர ஷர்மா.

மத்திய பிரதேச மாநிலம், குவாலியரில் வசிக்கும் ராஜேந்திர ஷர்மா என்ற வழக்கறிஞர், கடந்த 40 ஆண்டுகளாக தனது தெருவை கூட்டி சுத்தம் செய்து வருகிறார். இவரது முயற்சியின் காரணமாக இப்பகுதி மக்கள் இப்போது தெருவில் குப்பைக்கூளத்தை வீசக்கூடாது என்ற விழிப்புணர்வை பெற்றுள்ளனர்.

இதை இந்திய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் வெகுவாகப் பாராட்டியுள்ளார். தூய்மைப்படுத்துவதில் குடிமக்களின் பங்களிப்பு மிகவும் அவசியம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

-எஸ்.திவ்யா.

One Response

  1. k.venkataraman May 1, 2018 8:49 pm

Leave a Reply