எம்.எல்.ஏ. நிதியில் காவல் நிலையத்திற்கு கட்டிடம்.

எம்.எல்.ஏ. நிதியில் காவல் நிலையத்திற்கு கட்டிடம் கட்ட பூஜை போடப்பட்டது. சேலம் மாவட்டம் ஏற்காடு ஒன்றியத்தில் ஒன்டிக்கடை பகுதியில் செயல்பட்டு வரும் புறக்காவல் நிலையம் மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ளது. எனவே அங்கு ஏற்காடு எம்.எல்.ஏ. நிதியில் இருந்து, ரூபாய் இரண்டு லட்சம் மதிப்பீட்டில் புதிய கட்டிடம் கட்டுவதற்காக, ஏற்காடு எம்.எல்.ஏ. சித்ரா தலைமையில் பூஜை போடப்பட்டு கட்டுமாண பணி துவக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் புகழேந்தி, குணசேகரன் மற்றும் ஏற்காடு காவல் துறையினர் கலந்துக்கொண்டனர்.

– நவீன் குமார்.

 

Leave a Reply