திருச்சி மாவட்டம், பொன்மலையில் உள்ள சூசையப்பர் ஆலய திருவிழாவானது ஆண்டுதோறும் மே 1 தேதி உழைப்பாளர்கள் தினத்தன்று நடைபெறுவது வழக்கம், அதுபோல் 2018-ம் ஆண்டிற்கான திருவிழா கடந்த 22ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனையடுத்து தினமும் ஆலயத்தில் சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றது. உழைப்பாளர்களின் பாதுகாவலர் என்று கிறிஸ்தவர்களால் அழைக்கப்படும் சூசையப்பர் ஆலயமானது அருகில் உள்ள அனைத்து கிறிஸ்தவ ஆலயத்திற்க்கும் பங்கு ஆலயமாக கடந்த 85 ஆண்டுகளுக்கும் மேலாக திகழ்ந்து வருகிறது. இதன்மூலம் இந்த ஆலயத்தின் பெருமையை தெரிந்து கொள்ள முடியும். இந்த ஆலயமானது ஆங்கிலேயர் ஆட்சி செய்த காலத்தில் கட்டப்பட்ட ஆலயம் என்பது குறிப்பிடத்தக்கது.
இத்திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேர் பவனி நேற்று இரவு நடைபெற்றது. பங்கு தந்தை சின்னப்பன மற்றும் உதவி பங்குதந்தை பிலவேந்திரன் ஆகியோர் இணைந்து சிறப்பு ஆராதனை செய்து தேர் பவனியை துவக்கி வைத்தனர். தேரில் உயிர்த்தெழுந்த இயேசு, மாதா மற்றும் சூசையப்பர் ஆகிய தெய்வங்கள் பொன்மலையை சுற்றியுள்ள முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்தது. வழி நெடுகிலும் திரளான பொது மக்கள் மெழுகுவர்த்தி ஏந்தி வழிபட்டனர். விழாவின் ஏற்பாடுகளை இளைஞர் இயக்கத்தினர் ஏற்பாடு செய்து இருந்தனர்.
-ஆர்.சிராசுதீன்.