பொறியியல் படிப்பிற்கான இணையதளம் வாயிலாக விண்ணப்பித்தலை, திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் கு.இராசாமணி தொடங்கி வைத்தார்.

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும், சுயநிதி கல்லூரிகள் என 562 இன்ஜினியரிங் கல்லூரிகளில் உள்ள 2 லட்சத்து 60 ஆயிரம் பொறியியல் படிப்புகளில், 1 லட்சத்து 90 ஆயிரம் இடங்கள் அண்ணா பல்கலைக்கழகம் மூலம் நிரப்பப்படுகிறது.

இந்த வருடம் முதன் முறையாக ஆன்லைன் மூலமாக கலந்தாய்வு நடைபெறும் என்றும், அதற்காக கலந்தாய்வுக்கு ஆன்லைன்னில் விண்ணபித்தல் இன்று காலை முதல் தொடங்கியது.

திருச்சியில் அண்ணா பல்கலைக்கழக உறுப்புக்கல்லூரி திருச்சி வளாகத்தில் செயல்படும் உதவி மையத்தில் திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் கு.இராசாமணி பொறியியல் படிப்பிற்கான இணையதளம் வாயிலான விண்ணப்பித்தலை தொடங்கி வைத்து, மாணவர்களுக்கு விண்ணப்பங்களை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய மாவட்ட ஆட்சியர் தேசிய அளவில் முன் வரிசையில் இருக்ககூடிய அண்ணாபல்கலைக்கழகம், அதனை உறுதி செய்யும் வகையில் ஆன்லைன் பதிவு வசதி செய்யப்பட்டுள்ளது மகிழ்ச்சியளிப்பதுடன், வரவேற்கத்தக்கதாகவும், அனைவராலும் ஏற்றுக்கொள்ளதக்கதாக உள்ளது.

இது மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் மகிழ்ச்சியளிப்பதாக உள்ளது. வரக்கூடியகாலங்களில் நடைமுறை சிரமங்கள் சீராக்கப்பட்டு தகுதியானவர்கள் தகுதியான பயிற்சி மையங்களை, தகுதியான பாடங்களை தேர்வு செய்யும் முறை வரும் என்றார்.

இதனை தொடர்ந்து அங்குள்ள உதவியாளர்கள் மூலம் மாணவர்கள் ஆன்லைனில் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து வருகின்றனர்.

இதற்கான ஏற்பாடுகளை மைய ஒருங்கிணைப்பாளாரும், அண்ணா பல்கலைகழக பொறியியல் கல்லூரி முதல்வருமான செந்தில்குமார், இணை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியை அன்னப்பூரணி ஆகியோர் செய்தனர்.

-ஆர்.சிராசுதீன்.

 

 

 

Leave a Reply