காவிரி விவகாரம்!- உச்சநீதிமன்ற தீர்ப்பையே மதிக்காத ஒருவர், எப்படி ஒரு மாநிலத்தின் முதலமைச்சராக இருக்க முடியும்? சித்தராமையாவை உடனே கைது செய்ய வேண்டும்.

Hon’ble Mr. Justice Dipak Misra The Chief Justice Of India.

Hon’ble Mr. Justice A.M. Khanwilkar.

Hon’ble Dr. Justice D.Y. Chandrachud.

காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்ற உத்தரவை மதிக்காத மத்திய அரசு மீது, நீதி மன்ற அவமதிப்பு வழக்கு தமிழக அரசு தாக்கல் செய்துள்ளது. அந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், தமிழகத்திற்கு மே மாதத்திற்குள் 4 டி.எம்.சி. தண்ணீரை காவிரியில் கர்நாடகா அரசு திறந்துவிட வேண்டும். உத்தரவை மீறினால் கர்நாடகா அரசு கடும் விளைவை சந்திக்க நேரிடும் என்றும், காவிரி விவகாரத்தில் அரசியல் காரணங்களை ஏற்க மாட்டோம். அது பற்றி நீதிமன்றத்திற்கு கவலையில்லை. உச்சநீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற வேண்டும் என்றே எதிர்பார்க்கிறோம். இந்த விவகாரத்தில் என்ன செய்தோம் என்பது குறித்து மத்திய அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை மே 08-ம் தேதிக்கு ஒத்திவைத்து உள்ளனர்.

தண்ணீர் திறக்க மறுப்பு தெரிவித்த கர்நாடக அரசு வழக்கறிஞரை, தமிழகத்திற்கு தண்ணீர் தர முடியுமா? முடியாதா? என நீதிபதிகள் கண்டிப்புடன் கேள்வி எழுப்பினர்.

இந்நிலையில், இதுக்குறித்து கருத்து தெரிவித்துள்ள கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா, எங்களிடமே தண்ணீர் இல்லை. எங்கிருந்து தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் கொடுப்பது? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்திய இறையாண்மைக்கும், ஒருமைபாட்டிற்கும் ஊறுவிளைவிக்கும் வகையில், உச்ச நீதிமன்ற உத்தரவுகளுக்கு எதிராக தொடர்ந்து செயல்பட்டு வரும் சித்தராமையா மீது வழக்கு பதிவு செய்து உடனே கைது செய்ய வேண்டும். உச்ச நீதிமன்ற தீர்ப்பையே மதிக்காத ஒருவர், எப்படி ஒரு மாநிலத்தின் முதலமைச்சராக இருக்க முடியும்?

இதற்கு சித்தராமையாவின் தலைவர் ராகுல் காந்தியும், இந்திய பிரதமர் நரேந்திர மோதியும் என்ன பதில் சொல்ல போகிறார்கள்? 

தமிழகத்தை தொடர்ந்து வஞ்சிக்கப் போகிறார்களா? (அல்லது) உச்ச நீதிமன்ற உத்தரவை உடனே நடைமுறைப்படுத்தப் போகிறார்களா?

-டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com

3 Comments

  1. s kumar May 3, 2018 6:53 pm
  2. s kumar May 3, 2018 7:02 pm
  3. k.venkataraman May 3, 2018 8:57 pm

Leave a Reply