பள்ளிக்கூடத்தில் செயல்பட்டு வரும் நியாய விலை கடை!

கோவை மாவட்டம், கிணத்துக்கடவு தாலுக்காவை சேர்ந்த செட்டியக்காபாளையம் கிராமத்தில் நியாய விலை கடை கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் மிகவும் மோசமான நிலையை அடைந்ததையடுத்து கட்டிடத்தை இடித்துவிட்டு புதிய கட்டிடம் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டு பழைய கட்டிடம் இடிக்கப்பட்டது. கட்டிடம் இடிக்கப்பட்டதன் காரணமாக நியாய விலை கடையானது அருகில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தற்காலிகமாக செயல்பட அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால்,  மூன்று ஆண்டுகளுக்கு மேலாகியும் புதிய கட்டிடம் அமைக்க ஏற்பாடு செய்யாமல் இன்று வரையிலும் நியாய விலை கடையானது அந்த பள்ளியிலேயே செயல்படுகிறது.

இதனால், பள்ளியில் படிக்கும் மாணாக்கர்கள் மிகுந்த பாதிப்புக்குள்ளாகின்றனர். மாணாக்கர்கள் நலனில் கவனம் செலுத்தும் தமிழக அரசு மற்றும் அமைச்சகம் கடந்த சில தினங்களுக்கு முன் சில நன் நடத்தை விதிமுறைகளை வகுத்துள்ளது. அதேபோல் படிக்கும் சூழலை பேணிகாப்பதை தலையாய கடமைகளில் ஒன்றாக கருதி  தமிழக அரசு விரைவில்  புதிய நியாய விலை கடைக்கான கட்டிட பணிகளை தொடங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பள்ளியில் பயிலும் மாணாக்கர்களின் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கையாகும்.. கோரிக்கையை நிறைவேற்றுமா தமிழக அரசு…?

-தாமோதரன்.

Leave a Reply