ஏற்காடு, கூலித்தொழிலாளி குப்புசாமி கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த கொலையாளி கைது.

குப்புசாமி கொலைவழக்கில் கைது செய்யப்பட்ட கொலையாளி செந்தில்

சேலம் மாவட்டம், ஏற்காடு தாலுக்காவிற்குட்பட்ட கீரைக்காடு கிராமத்தை சேர்ந்தவர் கும்பா கவுண்டர் மகன் குப்புசாமி(46). கூலித் தொழிலாளி. இவரை கடந்த 23 அன்று ஏற்காடு டவுன் பகுதியை சேர்ந்த வடிவேல் மகன் செந்தில் என்கிற தனசேகர் டாக்சி ஓட்டுனர் என்பவர் கீரைக்காடு கிராமத்திற்கு சென்று மது அருந்த அழைத்து சென்றுள்ளார். பின்னர் இருவரும் மது அருந்தியுள்ளனர். இந்நிலையில் செந்தில் தனது 3 பவுன் செயின் மற்றும் பணம் காணவில்லை என்றும், அதை குப்புசாமிதான் எடுத்ததாக கூறி அவரிடம் வாக்குவாதம் செய்துள்ளார். பின்னர் செந்தில், பஸ் நிலையம், டேராகரடு பகுதியில் உள்ள தனது வீட்டிற்கு குப்புசாமியை அழைத்து சென்று தடியினால் தாக்கியுள்ளார்.

அப்போது அங்கிருந்து தப்பிய குப்புசாமி, டவுன் பகுதியில் மயங்கி கிடந்துள்ளார். அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு அவருக்கு நான்கு நாட்கள் சிகிச்சையளிக்கப்பட்டு 29 அன்று இறந்துவிட்டார். செந்தில் தலைமறைவாக இருந்து வந்தார். ஏற்காடு காவல் ஆய்வாளர் ஆனந்தன் தலைமையில் போலிசார் ஏற்காடு மற்றும் சேலத்தின் பல்வேறு பகுதிகளில் செந்திலை தேடிவந்தனர். மேலும் அவரது செல்போன் டவர் லொக்கேஷனை பின்தொடர்ந்து வந்தனர். இந்நிலையில் நேற்று, வழக்கு நடத்த பணம் தேவைக்காக ஏற்காட்டில் உள்ள தனது வீட்டிற்கு பணம் எடுக்க வந்துள்ளார்.

சேலத்தில் இருந்து ஏற்காட்டிற்கு பஸ்சில் வந்த செந்தில், படகு இல்ல அருகே பஸ்சில் இருந்து இறங்கி, தனது வீட்டிற் நடந்து செல்லும்போது, ஏற்காடு அரசினர் மேல்நிலை பள்ளி அருகே போலீசார் செந்திலை கைது செய்தனர். பின்னர் அவர் குப்புசாமியை வைத்து தாக்கிய வீட்டிற்கு சென்று, குப்புசாமியை தாக்க பயண்படுத்தி தடி உள்ளிட்ட பொருட்களை கைப்பற்றினர். மேலும் சேலம் மாநகராட்சி அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த செந்திலின் காரையும் கைப்பற்றினர். பின்னர் செந்திலை சிறையிலடைத்தனர்.

– நவீன் குமார்.

Leave a Reply