மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா நினைவிடத்தில், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆய்வு!

சென்னை மெரினா கடற்கரையில் எம்ஜிஆர் நினைவிடத்தின் அருகே, மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதாவின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. அந்த இடத்தில் ரூ.50 கோடி செலவில் ஜெ.ஜெயலலிதாவுக்கு நினைவிடம் அமைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது.

அதைத் தொடர்ந்து கடந்த ஜனவரியில் பொதுப்பணித் துறை சார்பில் டெண்டர் கோரப்பட்டு, ரூ.43 கோடியே 63 லட்சத்துக்கு டெண்டர் இறுதி செய்யப்பட்டுள்ளது.

ஆனால், தற்போது எம்ஜிஆர் நினைவிடப் பகுதியில் 36,806 சதுர மீட்டர் பரப்பளவில் மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா நினைவிடம் அமைய உள்ளது. அதில் அருங்காட்சியகம், அறிவுசார் பூங்கா ஆகியவையும் அமைக்கப்பட உள்ளன.

இந்நிலையில் மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா நினைவிடத்தில், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் இன்று ஆய்வு செய்தார்.

-கே.பி.சுகுமார்.

Leave a Reply