அடிப்படை வசதிகள் இல்லாத நீட் தேர்வு மையங்கள்!- பெற்றோர்கள் கொந்தளிப்பு.

நாடு முழுவதும் இன்று தேசிய தகுதி நுழைவு தேர்வு (NEET-NATIONAL ELIGIBILITY CUM ENTRANCE TEST) 13.26 லட்சம் பேர் எழுதுகின்றனர். தமிழகத்தில் 170 மையங்களில் 1,07,288 பேர் எழுதுகின்றனர். பல்வேறு மாவட்டங்களில் இருந்து தேர்வு எழுதும் மாணவர்களுடன் வந்த பெற்றோர்களுக்கு குடிநீர் மற்றும் கழிப்பறை வசதிகள் இல்லை என்று பெற்றோர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், திருச்சி, திருவெறும்பூர் அருகே உள்ள துப்பாக்கித் தொழிற்சாலை கேந்திரி வித்யாலயா பள்ளியில், சுமார் 2000 மாணவர்கள் இன்று தேர்வு எழுதுதினார்கள். மாணவர்களுடன் வந்த பெற்றோர்கள் வெட்ட வெளியில் மரத்தடியில் காத்திருக்கும் அவலநிலை உள்ளதாக பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும், தேர்வு மையத்திற்கு வந்து போக வழிகாட்டி பலகைகள் எதுவும் இல்லை. இதனால் வெளியூர்களில் இருந்து வந்தவர்கள் தேர்வு மையத்திற்கு வருவதற்கு  மிகவும் சிரமப்பட்டனர். அதே போல் இயற்கை உபாதைக்குக்கு செல்வதற்கு கூட சரியான ஏற்பாடுகள் செய்யவில்லை. சிறுநீர் கழிப்பதற்குகூட பெற்றோர்கள் மிகுந்த சிரமம் அடைந்தனர்.

இதனால் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த செக்யூரிடிக்கும்பெற்றோர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

-ஆர்.சிராசுதீன்.

Leave a Reply