உலக ரெட்கிரஸ் தினத்தை முன்னிட்டு திருச்சி திருவெறும்பூர் பெல் மனமகிழ் மன்றம் மற்றும் இந்தியன் ரெட்கிராஸ் இணைந்து பெல் மனமகிழ் மன்றத்தில் தன்னார்வ இரத்த தான முகாம் இன்று நடைப்பெற்றது.
இரத்த தான முகாமை பெல் செயலாண்மை இயக்குநர் ராஜமனோகர் தொடங்கி வைத்தார். இந்த முகாமில் பெல் மனமகிழ் மன்ற உறுப்பினர்கள் இந்திய ரெட்கிராஸ் உறப்பினர்கள் மற்றும் பெல் ஊழியர்கள் என அனைவரும் தானாக முன்வந்து இரத்த தானம் செய்தனர். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு இரத்த தானம் செய்தனர்.
திருச்சி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் புவனேஸ்வரி, பாலசந்தர், பிரபு ஆனந்த், ஜானகி, விஜயா, ரேவதி ஆகியோர் இரத்தங்களை சேகரித்து சென்றனர்.
-ஆர்.சிராசுதீன்.