தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளுள் ஒன்றான ஜல்லிகட்டு போட்டி, திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே உள்ள நவல்பட்டு கிராமத்தில் கிராம வழக்கப்படி நவல்பட்டு நவுலி குளத்தில் இன்று நடைப்பெற்றது. ஜல்லிகட்டு போட்டியை திருச்சி சப்-கலெக்டர் கமல் கிஷோர் தொடங்கி வைத்தார்.
இந்த விழாவில் திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினர் மகேஷ் பொய்யாமொழி, ஜல்லிகட்டு பேரவை மாநில தலைவர் ராஜசேகர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.
இந்த ஜல்லிகட்டு போட்டியில் 700 காளைகள் பதிவு செய்யப்பட்டன. 450 மாடுபிடி வீரர்கள் கலந்துகொண்டனர். முதலில் சஞ்சலா கோவில்காளை, அதன்பிறகு ராப்சல், ரெட்டமலை, மற்றும் நவல்பட்டு கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.
இந்த ஜல்லிகட்டு போட்டியில் கலந்துகொண்டு வெற்றிப் பெற்ற மாடுகளுக்கும், சிறப்பான மாடுபிடி வீரர்களுக்கும், ஷோபா, சைக்கிள், டிரஸ்சிங் டேபிள், கட்டில், கேஸ் ஸ்டவ் உள்ளிட்ட பொருட்கள் பரிசாக வழங்கப்பட்டன.
இந்த ஜல்லிகட்டு போட்டியில் மாடுபிடி வீரர்கள் நவல்பட்டை சேர்ந்த பிரதீப், புதுக்குடியை சேர்ந்த மகேஷ், கிராம கமிட்டி உறுப்பினர் மகாலிங்கம் உட்பட 10 பேர் காயமடைந்தனர்.
-ஆர்.சிராசுதீன்.