கொழும்பில் உள்ளுர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் விரும்பும் மிகவும் பிரபலமான இடங்களில் ஒன்றாக காலி கடற்கரைப் பகுதி அமைந்துள்ளது.
ஆனால், இந்த கடற்கரை பகுதி முழுவதும் பயன்படுத்தப்பட்ட பாலித்தீன் பைகள், பிளாஸ்டிக் பாட்டில்கள் வீசப்பட்டு குப்பை மேடாக இருந்து வந்தது.
இதை அறிந்த இலங்கை கடற்படையினர், இந்த கடற்கரை பகுதியில் சிதறிக்கிடந்த குப்பைகளையும், பாலித்தீன் பைகள் மற்றும் பிளாஸ்டிக் பாட்டில்கள் அனைத்தையும் ஒன்று விடாமல் இன்று (02 ஜூன்) சேகரித்து தூய்மை செய்தனர்.
மேலும், சேகரிக்கப்பட்ட பாலித்தீன் பைகள் மற்றும் பிளாஸ்டிக் பாட்டில்கள் அனைத்தையும், மறுசுழற்சி மையத்திற்கு அனுப்பி வைத்தனர். இலங்கையில் திடமான கழிவுப்பொருட்களை அகற்றும் பிரச்சினைக்கு நிலையான தீர்வு காண்பதற்கு, இலங்கை அரசுடன் இணைந்து இலங்கை கடற்படை முக்கிய பங்காற்றி வருகிறது.
-என்.வசந்த ராகவன்.