திருச்சியில் ஜீன் 9-ந்தேதி மதியம் வீசிய கடுமையான சூறாவளி காற்றில் மரங்கள், மின் கம்பங்கள், மின் மாற்றிகள் பல இடங்களில் சேதமடைந்தன. இதனால் மாவட்டம் முழுவதும் பல மணி நேரங்கள் மின் தடை ஏற்பட்டது.
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் ஊழியர்கள் சீரமைப்பு பணிகளில் ஈடுப்பட்டு மின் தடையை சரிசெய்தனர்.
ஆனால், திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் வட்டம், கீழமுல்லக்குடி ஊராட்சி, காந்திபுரம், புத்தாபுரம் ஆகிய இரண்டு கிராமங்கள் கடந்த 2 நாட்களுக்கு மேலாக இருளில் மூழ்கியுள்ளது.
ஜீன் 9 ந்தேதி மதியம் வீசிய சூறாவளி காற்றில் புத்தாபுரம் என்ற இடத்தில் இருந்த மின் மாற்றி பழுதடைந்ததாக கூறப்படுகிறது. இதனால் காந்திபுரம், புத்தாபுரம் ஆகிய இரண்டு கிராமங்களும் மின் விநியோகம் இன்றி கடந்த 2 நாட்களுக்கு மேலாக இருளில் மூழ்கியுள்ளது.
இதுக்குறித்து திருவெறும்பூர் மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் உதவி பொறியாளரிடம் புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுக்குறித்து திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவருக்கு நேற்று தொலைபேசி மூலம் புகார் அளிக்கப்பட்டது. உடனே நடவடிக்கை எடுப்பதாக திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவரின் உதவியாளர் உறுதியளித்தார். ஆனால் இதுவரை மின் தடை சரிசெய்யப்படவில்லை.
இதுக்குறித்து அம்மா அழைப்பு மையத்தில் நேற்று இரவு புகார் அளிக்கப்பட்டுள்ளது. (பதிவு எண் 18061000176) ஆனால், இந்த செய்தி பதிவாகும்வரை மேற்காணும் பகுதியில் மின் தடை சரிசெய்யப்படவில்லை.
இதனால் காந்திபுரம், புத்தாபுரம் ஆகிய இரண்டு கிராம மக்களின் சகச வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. மின் தடையால் குடிநீர் விநியோகம் முற்றிலும் தடைப்பட்டுள்ளது. பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ, மாணவிகள் மற்றும் வெளியில் வேலைக்கு செல்லும் நபர்கள் குளிக்காமலும், துணிகளை துவைக்காமலும் செல்ல வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது. குழந்தைகள், முதியோர்கள் இரவு நேரங்களில் தூங்க முடியாமல் பெரும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.
எனவே, தமிழக முதலமைச்சர் இதுசம்மந்தமாக போர்கால அடிப்படையில் நடவடிக்கை எடுப்பதற்கு சம்மந்தப்பட்ட அமைச்சக அதிகாரிகளுக்கு உத்தரவிடுவாரா?
பொறுத்திருந்துப் பார்ப்போம்.
-டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com