நடிகர் கமல்ஹாசன் ராகுல் காந்தியை நேரில் சந்தித்தார்!-கமல்ஹாசனின் கனவு நிறைவேறுமா?

மக்கள் நீதி மையம் கட்சியின் பதிவுக்காக டில்லி சென்றுள்ள அக்கட்சியின் நிறுவனர் நடிகர் கமல்ஹாசன், காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தியை அவரது வீட்டில் இன்று நேரில் சந்தித்து பேசினார்.

இச்சந்திப்பின் போது இன்றைய அரசியல் சூழ்நிலைகள் குறித்தும், இரு கட்சிகளின் எதிர்கால திட்டங்கள் குறித்தும் இருவரும் விரிவாக ஆலோசனை நடத்தியுள்ளனர்.

எதிர் வரும் 2019 மக்களவை தேர்தலில், நடிகர் கமல்ஹாசன் காங்கிரஸ் கட்சியை ஆதரிப்பாரா? (அல்லது) பாஜக மற்றும் காங்கிரஸ் அல்லாத மூன்றாவது அணியில் இணைந்து செயல்படுவாரா? என்பது இப்போதைக்கு உறுதியாக சொல்ல முடியாது.

இருந்தாலும், பாஜக மற்றும் காங்கிரஸ் அல்லாத மூன்றாவது அணியில் திமுக இணையும் பட்சத்தில், காங்கிரஸ் கட்சியை நடிகர் கமல்ஹாசன் நிச்சயம் ஆதரிப்பார் என்பது இதன் மூலம் தெளிவாக தெரிகிறது.

எப்படியாவது ஆட்சி அதிகாரத்தை நாம் கைப்பற்ற வேண்டும் (அல்லது) ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களுடன் நாம் அருகில் இருக்க வேண்டும், அப்போதுதான் தமிழக மக்களுக்கு நாம் ஏதாவது நல்லது செய்ய முடியும். அதற்காக கொள்கை அளவில் ஒரு சில விசியங்களில் சமரசம் செய்துக்கொள்வதில் தவறில்லை என்பதில், நடிகர் கமல்ஹாசன் தெளிவாக இருக்கிறார்.

அதே சமயம் தனது இயல்பான சித்தாந்தத்திற்கு எந்த வகையிலும் பொருந்தாத பாஜக-வுடன் எக்காரணத்தை முன்னிட்டும் கூட்டணி சேரக்கூடாது என்பதிலும் நடிகர் கமல்ஹாசன் உறுதியாக இருக்கிறார்.

நடிகர் கமல்ஹாசனின் கனவு நிறைவேறுமா? இதற்கு
காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.

பொறுத்திருந்துப் பார்ப்போம்.

-டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com

 

Leave a Reply