திருச்சியில் சக்தி மகளிர் இயக்கம் சார்பில் சர்வதேச விதவைகள் தின பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடைப்பெற்றது.

உலகம் முழுவதும் கணவனை இழந்து ஆதரவின்றி தவிக்கும் விதவை பெண்களின் நிலை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஜீன் 23-ம் தேதியினை சர்வதேச விதவைகள் தினமாக ஐ.நா. சபை அறிவித்துள்ளது.

இதை நினைவு கூறும் வகையிலும், அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டு வறுமையில் வாடும் விதவைப் பெண்களின் நிலைக் குறித்தும், அவர்களுக்கான வாழ்வாதாரத்தை மேம்படுத்த வலியுறுத்தியும், செர்வைட் சமூக பணி மையம், சக்தி மகளிர் இயக்கம் மற்றும் புது விடியல் விதவைப் பெண்கள் இயக்கத்தின் சார்பில் இன்று காலை 10 மணியளவில், திருச்சி அரியமங்கலம் எஸ்.ஐ.டி. பேருந்து நிறுத்தத்திலிருந்து பேரணி தொடங்கி, கீழ அம்பிகாபுரம் செர்வைட் சமூக பணி மைய வளாகம் வந்தடைந்தது.

இப்பேரணியை புனித வளனார் கல்லூரியின் முன்னாள் அதிபர் அருட்தந்தை ஜான் பிரிட்டோ துவக்கி வைத்தார். இதில் செர்வைட் சமூக பணி மையத்தின் செயலர் சகோதரி லில்லியன் மேரி, அருட்தந்தை அருள் சகாயராஜ், “உள்ளாட்சித்தகவல்” இணைய ஊடகத்தின் ஆசிரியர் டாக்டர் துரைபெஞ்சமின், தேசிய குழந்தை தொழிலாளர்கள் சிறப்பு பள்ளி திட்ட இயக்குநர் பியர்லின் மற்றும் பலர் கலந்துக்கொண்டனர். இப்பேரணியில் ஏராளமான விதவை பெண்கள் பங்கேற்றனர்.

அதன்பின் செர்வைட் சமூக பணி மைய வளாகத்தில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. பொதுக் கூட்டத்திற்கு உதயம் சமூக பணி மைய இயக்குநர் சில்வின் தலைமை வகித்தார். நிகழ்ச்சிகளை சகோதரி அன்பு ரோஸ் தொகுத்து வழங்கினார். நிறைவாக ஆரோக்கிய செல்வி நன்றியுரை வழங்கினார்.

-ஆர்.சிராசுதீன், வீ.குணசேகரன்.

Leave a Reply