ஆந்திர மாநில மக்கள் அளிக்கும் புகார்கள், கோரிக்கைகள், ஆலோசனைகள் அனைத்தையும், ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு உன்னிப்பாக கண்காணித்து ஆர்.டி.ஜி.(Real Time Grievance-RTG) மையத்தின் மூலம் உடனுக்குடன் நடவடிக்கை எடுத்து வருகிறார்.
சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் அவரே பேசுகிறார், பொதுமக்களின் நேர்மையான பிரச்சனைகளுக்கு போர்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கும்படி அவரே உத்தரவிடுகிறார். ஆர்.டி.ஜி. (Real Time Grievance-RTG) மையத்தின் மூலம் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் முதலமைச்சர் தொடர்புகொள்வார் என்பதால், ஆந்திர மாநில அரசு அதிகாரிகள் அனைவரும் விழிப்பிதுங்கி போய் இருக்கிறார்கள்.
கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு, ஆர்.டி.ஜி. மையத்தில் இருந்து கிருஷ்ணா நதியின் பவித்திர சங்கமம் மற்றும் பிரகாசம் அணைக்கட்டு பகுதிகளை பார்வையிட்ட ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, அப்பகுதிகளில் ஆக்கிரமித்து இருந்த செடி, கொடிகளை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
உடனே, சம்மந்தப்பட்ட அதிகாரிகளை தொடர்பு கொண்டு நீர்நிலைகளில் உள்ள செடி, கொடிகள் மற்றும் ஆக்கிரமிப்புகளை அகற்றி சுத்தம் செய்யுமாறு உத்தரவிட்டார். அவற்றின் விளைவாக தற்போது அப்பகுதி முழுவதும் தூய்மையாக உள்ளது.
-டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com