கொழும்பு துறைமுகத்தில் இருந்து 11.6 கடல் மைல் தூரத்தில் டொமினிக்க குடியரசு (Dominican Republic) கொடியின் கீழ் பயணம் செய்த வணிக கப்பல் ஒன்று, கேப்டனின் கட்டுப்பாட்டை இழந்து கடலில் மூழ்கும் அபாயத்தில் இருந்தது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு இன்று அதிகாலை (26 ஜூன்) இரண்டு கப்பலுடன் விரைந்து சென்ற இலங்கை கடற்படையினர், கப்பலில் இருந்த 10 இலங்கையர்களையும், ஒரு இந்தோனேசிய நபரையும் பாதுகாப்பாக மீட்டு, கொழும்பு துறைமுகத்திற்கு கொண்டு வந்தனர்.
மீட்கப்பட்ட நபர்கள் அனைவரும் கொழும்பு கடற்படை போலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
-என்.வசந்த ராகவன்.