குடியிருப்பு பகுதியில் இயங்கி வரும் அரசு மதுபானக்கடையை அகற்ற தயாராகிவரும் கிராம பொதுமக்கள்!

திருச்சிராப்பள்ளி மாவட்டம், மணிகண்டம் ஒன்றிய எல்லைக்குட்பட்ட சூறாவளிபட்டி எனும் கிராமத்தில், அரசு டாஸ்மாக் மதுபானக் கடை (கடை எண் : 10299) அரசு மேல்நிலை பள்ளிக்கு அருகே தனியார் ஒருவருக்கு சொந்தமான வீட்டில் பொதுமக்களின் கடும் எதிர்ப்பையும் மீறி காவல்துறை பாதுகாப்புடன் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

பள்ளி, கல்லூரிகள் மற்றும் கோவில்களுக்கு அருகில் அரசு மதுபானக்கடையை திறக்க கூடாது என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால், அவற்றையெல்லாம் டாஸ்மாக் நிர்வாகம் கண்டுக்கொண்டதாக தெரியவில்லை.

இதற்கு பெண்கள், குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதுக்குறித்து திருச்சி மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை உயரதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் எந்த பயனும் இல்லை.

இதனால் வெறுப்படைந்த அப்பகுதி மக்கள், இரவோடு இரவாக அந்த மதுபான கடையை அகற்ற முடிவெடுத்து உள்ளதாக தெரிகிறது. இதனால் காவல்துறைக்கும், பொதுமக்களுக்கும் மோதல் போக்கு உருவாகும்.

எனவே, திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் அப்பகுதியை நேரில் பார்வையிட்டு, பொது மக்களின் கோரிக்கைக்கு மதிப்பளித்து உரிய நடவடிக்கை மேற்கொள்வாரா?

பொறுத்திருந்துப் பார்ப்போம்.

– கே.பி.சுகுமார்.

 

 

Leave a Reply