நீதிமன்றத்தில் வழக்கறிஞராக கால் பதிக்கும் முதல் திருநங்கை!- அதிசயம் ஆனால் உண்மை.

திருநங்கை சத்ய ஸ்ரீ.

இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி, நயினார் கோயில் பகுதியை பூர்வீகமாகக் கொண்ட சத்யஸ்ரீ என்ற திருநங்கை, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலில் இந்தியாவின் முதல் வழக்கறிஞராக தன்னை இன்று பதிவு செய்துள்ளார்.

பள்ளி மற்றும் கல்லூரி படிப்பினை சத்யஸ்ரீ பரமக்குடியில் பூர்த்தி செய்தார். பெற்றோர்களுடன் வாழ்ந்து வந்த சத்யஸ்ரீ, தான் ஒரு திருநங்கை என்பதை உணர்ந்த தருணத்தில், குடும்பத்தினருடன் இருந்து பிரிந்து, செங்கல்பட்டு அருகே உள்ள நடராஜபுரத்தில் திருநங்கை ஷர்மிளா என்பவரின் ஆதரவுடன் வசிக்கத் துவங்கினார்.

அன்றிலிருந்து தனது வளர்ப்பு தாய் ஷர்மிளாமின் பெயரை தன் பெயருடன் இணைத்து சத்யஸ்ரீ ஷர்மிளா என்று போட்டுக்கொண்டார்.

இதனை தொடர்ந்து சேலம் சட்டக் கல்லூரியில் சட்டப்படிப்பினை முடித்தார். 2007-ல் சட்டப்படிப்பினை முடித்த சத்யஸ்ரீ ஷர்மிளா, இன்றுதான் பார் கவுன்சிலில் தன்னை வழக்கறிஞராக பதிவு செய்துள்ளார்.

-டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com

Leave a Reply