காவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டம் மத்திய நீர்வள ஆணைய தலைவர் மசூத் உசேன் தலைமையில் 02.07.2018 அன்று புது தில்லியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழகம், கர்நாடகம், கேரளா ஆகிய மாநிலங்களின் சார்பில் உறுப்பினராக இடம் பெற்றுள்ள அதிகாரிகள் கலந்துக்கொண்டார்கள்.
கூட்டத்தில் காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான அனைத்து விஷயங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. 4 மணி நேரங்கள் நடைபெற்ற இந்த கூட்டத்தில், மாநிலங்கள் சார்பில் பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
இந்நிலையில், காவிரியில் தமிழகத்திற்கு ஜூலை மாதம் 31 டிஎம்சி தண்ணீர் திறக்க கர்நாடகாவிற்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
-எஸ்.சதிஸ் சர்மா.