நாட்டில் முதன்முறையாக ஆஸ்திரேலியா நிபுணர்களின் ஆலோசனையின் பேரில், காய்கறி கழிவிலிருந்து 31 மணி நேரத்திற்குள் உரம் தயாரிக்கும் திட்டத்தை, ஆந்திர மாநில அரசு செயல்படுத்த உள்ளது.
முதலில் குண்டூர் மற்றும் விஜயவாடா பகுதிகளில் இந்த ஆலை தொடங்கப்பட இருக்கிறது. பழங்கள் மற்றும் காய்கறிகள் கழிவிலிருந்து தயாரிக்கப்படும் இயற்கை (ஆர்கானிக்) உரங்களை, விவசாயிகளுக்கு குறைந்த விலையில் விநியோகிக்கப்படும் என்று, ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
-ஆர்.மார்ஷல்.