மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் இருந்து வரும் திமுக தலைவர் மு.கருணாநிதியை, இந்திய குடியரசு துணைத் தலைவர் வெங்கையாநாயுடு நேரில் பார்த்தார்.

சென்னை, காவேரி மருத்துவமனையில் மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வரும், திமுக தலைவர் கலைஞர் மு.கருணாநிதியை, இந்திய குடியரசு துணைத் தலைவர் வெங்கையாநாயுடு இன்று நேரில் சென்று பார்த்தார்.

திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினிடம் கலைஞரின் உடல் நலம் குறித்து கேட்டறிந்தார். அவருடன் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், அமைச்சர் ஜெயக்குமார், மாநிலங்களவை உறுப்பினர் கவிஞர் கனிமொழி ஆகியோர் உடனிருந்தனர்.

-டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com

Leave a Reply